Monday, May 12, 2008

முரண்பாடுகள் கொண்ட என் மனம்

நீ என் பக்கத்திலே இல்லாத போது ...
என் அழுகைக்கு , சோகத்துக்கு ..
எதையும்
நான் யார்கிட்டயும் பகிர்ந்துக்காமே
உனக்காகவே காத்து நிக்கற முட்டாள்தனத்துக்கு ...
ஏன்?
என்னோட எல்லா கஷ்டங்களுக்கும் ...
நீ தான் காரணமின்னு...
சதா உன்னையே குற்றஞ் சாட்டி ........
உன் மேல அன்பு வச்சதே தப்புன்னும் .....
என்னை திட்டி
அறிக்கைகள் கொடுத்துகிட்டிருக்கிற மனசு...

என்னை அலட்சியப்படுத்துகிற உன்னை ...
இனி மறக்க போறதாகவும் ...
உன்னை ,உன் நினைவுகளை விட்டு
எங்கியாவது கண் காணாத தேசத்துக்கு
ஓடி போயிரலாம்னு அறிவுரை பண்ணி பொலம்பற அதே மனசு...

ரொம்ப நாள் கழிச்சு ..
உன்னை பார்த்துட்டா ...
எல்லாத்தையும் மறந்துரும்
உன் சிரிப்பு ...கொஞ்சல் ... கெஞ்சல் ....
காரணங்களே .. கேக்க தோணாமே போயிடும் ...
அதுவும் ...
நீ ஆதரவா தலை கோதி ..
உன் மடியில் சாய்த்து கதை பேச தொடங்கும் போது
இதற்காகவே .. உன் பிரிவை தாங்கி கொள்ளலாமின்னு ..
எத்தனை வருத்தத்துக்கு நடுவேயும் வாழ்ந்திரலாமின்னும்
சொல்லி சொல்லி சந்தோசப்படும்..

நீ வந்தவுடனே ஓடி ஒழிஞ்சுகிட்ட
ஒன்னு ரெண்டு சோகம்
எல்லாம் நியாபகத்துக்கு வந்து
என்னை கேலி பண்ணி
கேவலமா பாத்து சிரிச்சா
உடனே
கொஞ்சம் ரோஷம் வந்த மாதிரி நடிச்சு..
அப்போ ஏன் அப்படி பண்ணினே..
அந்த வார்த்தையை ஏன் சொன்னே..
இதை ஏன் செய்யலேனு
அதே மனசு
உனக்கான விசாரணையை ஆரம்பிக்கும் ..
நீ காரணங்களை அடுக்கும் போது ..
தப்பு பண்ணியே இருந்தாலும்....
ஏதோ கேள்வி கேட்டதே
பெரிய வேலை அப்படிங்கற மாதிரியும்
இதனாலே நேரம் வீணா போனது மாதிரியும்...
தன்னையே நொந்துக்கும்..

உன் சோம்பேறித்தனம் ,பொறுப்புகள் எல்லாம்
தெரிஞ்சது தானேன்னு தொடங்கி
கடைசியா..
மகளாக இருந்த போது புரிஞ்சுக்காததை எல்லாம் இனி அம்மாவாக ஆனபின்
கட்டாயம் புரிஞ்சுக்குவான்னு
கடமைக்கு ...ஒரு தீர்ப்பை சொல்லிட்டு
விழுந்து விழுந்து உனக்கு சேவகம் பாக்க போயிரும்

பிரிஞ்சு போகிற நிமிஷங்களிலே
என் கையை இறுக்கமா பிடிச்சுகிட்டு ....
போய்ட்டு வரேன்னு
நீ சொல்லும் போது ...
என்னையும் உன்னோட கூட்டிகிட்டு போயிடுன்னு
கேக்கவும் தோணாமே
இல்லாட்டி உன்னை விட மாட்டேனும் சொல்ல முடியாம
அடுத்து எப்போ பாக்கலாம் அப்படினு பேச்சை முடிச்சுக்கும் !!!!

ரயில் கெளம்பி...
தூரமா போனவுடனே...
சுற்றிலும் பாத்துட்டு..
பக்கத்திலே யாரும் இல்லேன்னு தெரிஞ்ச பின்னாடி..
காதுக்கு கூட கேக்காத அளவுக்கு
கண்ணீர் விட்டு அழ ஆரம்பிக்கும்.... !!!!!!!!!!!

2 comments:

Anonymous said...

அழகான உணர்வுகளின் அருமையான வெளிப்பாடு...எனக்கு ரொம்ப பிடித்தது
அன்புடன் அருணா

Anonymous said...

idhu ennayum en kanavarodu naan kollum oodalkalayum nyabaga paduthukirathu subathra.. ella ponnungalum ipdi thanaaa???