சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்க வேண்டும் ..
- இது ஜூலியஸ் சீசரின் வார்த்தைகள் தான்
அதே போல் தான் உங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவளாய் அம்மு இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் . என் எழுத்துக்கள் உங்கள் வாசிப்புகளுக்கும் ,விமர்சனங்களுக்கும் எப்போதும் காத்திருக்கிறது .
ஒரு வெயில் நாளின் இரவாய் ...
மழை நாளின் பகலாய் ....
ரசித்து கொண்டு இருக்கிறேன் அவளை ...............
என் எதிர்காலத்தை அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
மழையில் நனைய நான் ஆசைப்பட்டால் ...
அவள் அதில் விளையாடி கொண்டிருப்பாள்
அவளை நேசிப்பதால் எழுதுகிறேன் என்பது அல்ல
அவள் என் எதிர்காலத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ..
காலம்... அவளை காட்டி தான்
எனக்குள் மாற்றங்களை ஊட்டி கொண்டிருக்கிறது ..
மகளாய் அவளிருந்த பொழுதுகளை விட
ஒரு தாயாய்
மகனுக்கு தவிக்கையில்
கணவனை கவனிக்கையில்
மனதினை ஈர்க்கிறாள்
வருங்காலத்தை நான் ஏற்று கொள்ள
நல்லது ,கெட்டது என நால்வைக்கும்
வாசலில் நின்று
வருகை சொல்லி கொண்டிருக்கிறாள் ...
No comments:
Post a Comment