இது அனைவரையும் ஆச்சிரியப்படுத்துகிறது
இதற்கு நான் என்ன செய்வது ?
என்கிறாய் நீ
உனக்கு தெரியுமா ???
நம் இருவரில்
யாரோ ஒருவர் தான் அப்படி வாழ முடியும்
அதிலும் நீ அதிர்ஷ்டசாலி ..
ஆணாய் பிறந்ததினால் !!!!!!!!!!!!!!
குடும்பத்துக்கான வரைமுறைகள்,நடைமுறைகள்
எதுவும் உன்னை கட்டுப்படுத்தி விட முடியாததாய்
அதையும் விட
நல்லவையோ கெட்டவையோ ....
உன் கருத்துகளுக்கு செவிமடுத்து
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உன் செயல்கள்
எல்லாவற்றையும் ஏற்று கொண்டு
சகிப்பு தன்மையின் சான்றாய் ......
என் விருப்பு வெறுப்புகள் மறைத்து
உன்
என் விருப்பு வெறுப்புகள் மறைத்து
உன்
தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் பாதையில்
பயணம் செய்ய
நான் என் வாழ்க்கையையே விலையாய் கொடுத்திருகிறேன் !!!!
நான் என் வாழ்க்கையையே விலையாய் கொடுத்திருகிறேன் !!!!
No comments:
Post a Comment