Tuesday, August 31, 2010

படித்ததில் பிடித்தது -சோளம் கலந்த நம் உணவுகள்

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறோம். "Corn இல்லாமல் எந்த உணவுமே இல்லை" என்று புதிதாக ஒரு மொழி வரும் போல இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? எப்படி என்று அறிய கீழே உள்ள கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் சொல்லுகிறீர்கள் பார்ப்போம்.

  • நீங்கள் காலையில் எழுந்தவுடன் breakfast-க்கு corn-flakes அல்லது Grits என்பதை போன்று உண்பவரா?
  • உங்களுக்கு கோக் அல்லது பெப்சி இல்லாமல் வாழவே முடியாதா?
  • ஐஸ்கிரீம் சாப்பிடுபவரா?
  • உணவகங்களில் டோமோடோ சூப் அல்லது ஏதேனும் ஒரு சூப் குடிப்பவரா?
  • எந்த உணவுக்கும் ketchup தொட்டு கொள்பவரா?
  • சாக்லேட், பிஸ்கட், Candy சாப்பிடுபவரா?
  • பீர் குடிப்பவரா?
  • விக்ஸ், இருமல் டானிக் எடுத்து கொள்பவரா?
  • சாலட் சாப்பிடும் போது சாலட் டிரெஸ்ஸிங் போட்டுகொள்பவரா?
  • Pizza சாப்பிடுபவரா?
  • பிரட் சாப்பிடுபவரா?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் 'ஆம்' என்று பதில் அளித்திருந்தால் நீங்கள் சோளத்திலிருந்து எடுக்கப்படும் சோள சர்க்கரை - High Fructose Corn Syrup (HFCS) என்ற சுவையூட்டியை தினமும் உண்கிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த சர்க்கரை அதிக ஆபத்தானது. தற்போதைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தால் இந்த சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்கிறார்கள். இதுகுறித்து இளைம் தலைமுறையினருக்கு பெற்றோருக்கும் விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
சோளத்தில் உள்ள கார்போஹைடேரேட் பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு fructose எனப்படும் சர்க்கரையாக மாற்றபடுகிறது. இந்த fructose, corn syrup (100% glucose) உடன் மேலும் சுவையூட்ட சேர்க்கபடுகிறது.
சோளத்தின் விலை கரும்பின் விலையை விட மலிவாதலால் இந்த HFCS மேற்குறிப்பட்ட எல்லா உணவு பொருள்களிலும் சர்க்கரைக்கு பதில் அமெரிக்காவில் முதலில் சேர்க்கபட்டது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் அதிக அளவு இது சேர்க்கப்பட்டு வருகிறது.
சரி, இது நல்ல விஷயம் தானே என்று நினைத்தால், இல்லை!
கரும்பு சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவை விட இந்த சோள சர்க்கரையில் இருக்கும் கார்போஹைடேரேட் அளவு அதிகம் என்பதால், அதில் தயாரித்த உணவை செரிக்க நம்முடைய உடல் அதிக அளவில் இன்சுலின் தயாரிக்க வேண்டி வரும். முடிவு சர்க்கரை வியாதி.
இந்தியாவில் தற்போது இருக்கும் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக புள்ளியியல் தெரிவிக்கிறது. இதிலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமான இந்த சோள சர்க்கரை உணவுகள் கொண்ட பொருள்களை உண்ண ஆரம்பித்தால் இந்தியாவில் அனைவரும் வெகு விரைவில் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஆகி விடுவோம்.
இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

  •  முடிந்த அளவு HFCS உள்ள பொருள்களை உண்ணாமல் தவிர்க்கலாம்.
  •  கடைகளில் பொருள்களை வாங்கும் போது லேபிள்களை படித்து, அதில் HFCS என்ற பொருள் இருக்கிறதா? என்று பரிசோதித்த பின் வாங்கலாம்.
  •  தவிர்க்க முடியாத காரணத்தால் உண்ண நேர்ந்தால் அளவாக உண்ணலாம்.
  •  தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

நமது பாரம்பரிய உணவு முறையில் அதிகம் உபயோகபடுத்தபடும் கரும்பு சர்க்கரை, வெல்லம் மற்றும் பனை வெல்லம் போன்றவை இயற்கையானவை. எந்த வேதியியல் மாற்றத்துக்கும் உட்படுத்தபடாதவை ஆகையால் முடிந்த அளவு இயற்கையான இனிப்பை குறித்த அளவு உண்ணுவோம் உடல் நலம்
காப்போம்

                                                                                                                  உபயம் -விகடன் 

No comments: