Friday, December 12, 2008

தேசபக்தி

என்னால் தேச பக்தி என்ற ஒரு தனிப்பட்ட கருத்தோடு எப்போதும் ஒத்து போக முடிவதில்லை. அது மனித நேயம் என்கிற மாபெரும் லட்சியத்தை காயப்படுத்துகிற கருவி. ஒரு தேசத்துக்கான பக்தி ஏன் மற்றொரு உயிருக்கு ,சக மனிதனுக்கு மதிப்பு கொடுக்கிற மனிதநேயமாய் மாற இந்த கல்வி துணை நிற்கவில்லை?. மெத்தபடித்தவர்கள் நிறைந்த நம் சுற்றம் ஏன் எல்லைகள் தேவையில்லை என்று மக்களிடையே விழிப்புணர்வு வளர்க்கவில்லை ? எல்லாவற்றையும் கடை தெருவுக்கு கொணர்ந்து காசாக்கி பார்த்த வியாபார வர்க்கம் தேச பக்தியையும் விலை பேசி கொண்டிருக்கிறது. காசில்லாதவன் கூட கோயிலுக்கு என்று நன்கொடை கேட்கையில் சட்டை பையை துழாவி காசு போடுகிற அடித்தட்டு வர்க்க மக்கள் அதிகம் நிறைந்த சமூகம் நம்முடையது . உணர்ச்சிகளோடு விளையாடுவதன் மூலம் ...எல்லா தரப்பு மக்களிடமும் காசு பார்க்க நினைக்கிற உத்தி இது . பதவி ,புகழ் என பெரிய ஆதாயங்கள் வேண்டி ,உலகம் தன்னை கொண்டாட வேண்டி புத்திசாலிகள் தொடர்கிற விளையாட்டு .தனக்கு சிறிதளவும் சம்பந்தமில்லாத தேசபக்தியை மறுப்பதன் மூலம் இத்தனையும் இழக்க வேண்டி வருமே . அதே சமயம் தேசபக்திக்கும் , தீவிரவாதத்துக்கும் எந்த உறவையும் ஏற்படுத்த நான் விரும்பவில்லை .சக மனிதனை ,ரத்தமும் சதையும் கலந்த ஒரு உயிரை மதங்களின் பெயரால் ,கொள்கைகளின் பெயரால் கொல்ல ,துன்புறுத்த விரும்பும் யாரையும் தண்டிக்கலாம்.அதற்கு தேசபக்தி ஒரு துணை காரணம் அல்ல - பூந்தென்றல்

1 comment:

tt said...

// ஒரு தேசத்துக்கான பக்தி ஏன் மற்றொரு உயிருக்கு ,சக மனிதனுக்கு மதிப்பு கொடுக்கிற மனிதநேயமாய் மாற இந்த கல்வி துணை நிற்கவில்லை?. //

நல்ல கருத்து..