Wednesday, June 17, 2009

பெண் மக்கள்


கழுத்தில் தாலி ஏறியவுடன் பெண் மக்கள் வாழ்க்கை, இன்பமும் துன்பமும் கலந்து இனம் புரியாத பெரும் மாற்றங்களை சந்தித்து விடுகிறது .தத்தம் அனுமதி இல்லாமலே வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு பொருந்தி போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது . பொறுத்து போ என்கிற அறிவுரை மட்டும் பொழுதுக்கும் செலுத்தப்படுகிறது. ஆண்மக்களுக்கு அத்தகைய பொறுப்பு சிறிதுமில்லை . எப்போதும் போல் அவர்களுக்கு வாழ்க்கை நகர்கிறது .

வேலை தவிர்த்து எதற்காகவேனும் வேற்று இடம் புகுகிற கட்டாயங்களை கணவன்மார்கள் சந்திக்க அவசியமிருப்பதில்லை. இந்த சமூகத்தின் சட்டம் எத்தகைய கொடியது பாருங்கள்.

விடுமுறை நாட்களில் கூட மாமனார் வீட்டு வாசலில் மனைவியை விட்டுவிட்டு ஓடி போகிற சுதந்திரம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது .

முறையீடு

அரசன் மகளே ஆனாலும் புருஷன் வீட்டில் பொண்டாட்டி தான் என்பார்கள் .
மனைவியை மகராணியை போல் நடத்த வேண்டாம் ..ஆனால் எத்தனை கணவன்மார்கள் மனைவியின் திறமைகள் அறிந்தவராய் இருக்கின்றனர் ? எத்தனை தூரம் அவளை மதிக்கிற மதி படைத்தவராய் நிற்கின்றனர் ? அவள் கருத்தும் என்னவென்று கேட்கிற செவி கொண்டவர் எத்தனை பேர் ? பெயரளவில் பெருமிதமாய் நடத்தபடுகிற அவலமே அதிகம் !!!!
அடுத்த நிமிடம் என்ன செய்ய போகிறோம் என்பது கூட தெரியாமலே காற்றின் அசைவுக்கு இழுக்கப்படுகிற படகை போல் மனைவிமார் வாழ துவங்கி விடுகின்றனர்.
இங்கே நான் பேசுவது பெண் அடிமைத்தனம் பற்றி அல்ல ...
ரத்தமும் ,சதையும் மட்டுமின்றி உணர்வுகள்,கனவுகள் ,லட்சியங்கள் என ஒரு கலவையில் செதுக்கப்பட்ட மனித உயிர் மனைவியாய் நிற்பது புரிய வேண்டும். ஒருவர் கருத்தை இன்னொருவர் வாழ்கையில் சுயத்தை இழக்க நேரிடும் தான் .சுயத்தை இழப்பது சுகமாயிருக்க வேண்டும் ..வலிக்க கூடாது.

1 comment:

Kothai said...

Nice one.