Monday, February 15, 2010

தூரம் -ஒரு எச்சரிக்கை

பெண்ணே,


ஜாக்கிரதை...

இன்று

உனக்கும் எனக்குமான

இந்த 300 கீ.மீ தூரத்தில்

என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா ?


நெட்வொர்க் பிசி,

லோ பேட்டரி ,

நோ பேலன்ஸ்,

அவரவர்க்கான குடும்ப பொறுப்புகள்...

நேரமின்மை,

வேலைப்பளு....

.................................................................

உயிரான ரசனைகள்,

கவிதைதனமான வாழ்க்கை,

குழந்தைத்தனம்

எல்லாம் விட்டு

உயிரற்ற  பொருட்களுக்காய்  ஓடுகிற

எந்திர ஓட்டம்...



வாழ்க்கையின் கட்டாயங்கள்,

வரவுக்கும் , செலவுக்கும் நடுவே தடுமாறும்

சமுதாய அந்தஸ்து ! !



நாளை ....

இவை எல்லாம்

30 செ.மீ இடைவெளிக்குள் வந்து விடும் ....

தயாராக இருப்போம்


(இதை எழுதி 5 வருடங்கள் ஆகிறது - 2005)

No comments: