எப்பவுமே அவரு ஏரிகரையோரமா தான் டென்ட் போடுவாரு. இந்த பய புள்ளைக எல்லாம் என்ன பண்றாங்க ? ஒழுங்கா வரிசைலே போறாங்களானு பாக்கவும் ,அவங்க சத்தம் போடாமே இருக்கவும் பேராசியருக்கு உதவியா போறது தான் எங்க வேலை. மொத்தம் நாலு நாள் கேம்ப் அது .
ஒரு நாள் அதிகாலையிலே எழுந்து ஏரி கரையோரமா நின்னு புகைப்படம் எடுத்துகிட்டு இருந்தேன் . கேம்ப்புக்கு வந்த ஸ்கூல் பசங்களோட வாத்தியாருங்க( டீச்சரம்மாக்கள் 2 பேரு+ வாத்தியாருங்க 2 பேரு ) நாலு பேரும் பேசிக்கிட்டே நடந்து வந்தாங்க. நான் நின்னுகிட்டிருந்த எடத்துலே இருந்து ஒரு ரெண்டடி தள்ளி ஒரு படகு இருந்துச்சு.அதை பார்த்தவுடனே நாலு பேருல ஒரு வாத்தியாரு படகை எடுத்துகிட்டு அப்படியே ஆற்றுலே கொஞ்ச தூரம் உலா போய்ட்டு வரலாமின்னு யோசனை சொன்னாரு .
நான் ஏற்கனவே அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் அப்டிங்கற மாதிரி யாராவது படகுலே கூட்டிட்டு போக மாட்டங்களானு காத்துகிட்டு இருந்தேன். உடனே நான் ஓடி போயி பேராசிரியருக்கிட்டே அனுமதி கேட்டுட்டு வந்து அவங்க ஜோதி-ல ஐக்கியமாயிட்டேன்.ரெண்டு வாத்தியாருங்க துடுப்பு போட்டாங்க. மத்த ரெண்டு டீச்சர்களும் நானும் பேசிக்கிட்டே போனோம். போகும் போது காத்து சரியா அடிச்சதாலே சுலபமா துடுப்பு போட்டாங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா ரொம்ப தூரம் வந்துட்டது தெரிஞ்சது. சரி திரும்பி போகலாமின்னு துடுப்பு போடா ஆரம்பிச்சா.. படகு நகர்ந்தா தானே.காத்து எங்களை ஒரு திசையில் தள்ளிகிட்டே இருந்துச்சு. துடுப்பு போட்டுக்கிட்டு இருந்த ஒருத்தர் கையை விரிச்சுட்டாரு ..நம்மளாலே இனிமே போடமுடியாதுன்னு ..உதவிக்கு யாரையாவது கூப்பிடலாமின்னு பாத்தா கரையை விட்டு ரொம்ப தூரம் இருந்தோம் .இப்போ மாதிரி அப்போ ரூவாய்க்கு ரெண்டு செல்போன் எல்லாம் கெடையாது. அப்படியே இருந்தாலும் அங்கே டவர் கெடச்சிருக்காது. மாத்தி மாத்தி எல்லாரும் ஆளாளுக்கு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.
அதுலே ஒருத்தர் இப்படி பொலம்பினாரு ."ஒரு கல்யாணம் கூட ஆகாமே இப்படி சாக போறோமேன்னு",.(அப்போ அவருக்கு கல்யாணம் எவ்வளவு கஷ்டமின்னு தெரியலே போல.. கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் கவலை பட தேவை இருக்காது . யோசிக்காமே குதிச்சிருப்பாரு !!ஹைய்யோ ,ஹைய்யோ )..
"அட பாவிகளா நீங்களாவது வேலைல சேர்ந்து நாலு காசு சம்பாரிக்கறிங்க... நான் இன்னும் படிப்பையே முடிக்கலியேடா.உலா போக ஆசைப்பட்டு இப்படி உயிர் போக போகுதே " , இப்படி உள்ளுக்குளே பொலம்பிகிட்டு இருந்தேன்.
அந்த ஏரி ஒரு பதினைந்து அடி ஆழம் இருக்கும். கொடைக்கானல் குளிருக்கு தண்ணில விழுந்தவுடனே ஜல சமாதி தான். நீச்சல் தெரிஞ்சவங்களுக்கே இந்த நெலமை தான்னா .. எனக்கெல்லாம் யாராவது பேப்பர்ல நீச்சலுனு எழுதினாதான் தெரியும் ...இதுல நான் எங்க போயி பிழைக்கறது?
என்னை பத்தி நானே பெருமையா சொல்லிக்க கூடாது தான்.. என்னங்க பண்றது?. நாங்க எல்லாம் கால் நனைக்கற அளவு இருந்த தண்ணிலயே மூழ்கினவங்க.
ஆனா இவ்வளவு சலசலப்புக்கும் , அந்த படகு கொஞ்சம் கூட அசரலியே..
துடுப்பு போடலேன்னா படகு நகராதே ஒழிய கவிழாது அப்படிங்கறதே எங்க யாருக்கும் அந்த பதட்டத்துலே ஞாபகம் வரலே. கொஞ்ச நேரத்துலே காத்தடிக்கிறது கொறஞ்சது .. அப்படியே ஐலசா எல்லாம் போட்டு,எப்படியோ போராடி ...படகை கரைக்கு கொண்டு வந்து சேத்துட்டோம்.என்ன? ஆசையா போன படகு சவாரி ...ஒன்றரை மணி நேரம் கழிச்சு வர வேண்டியதா போச்சு.
நேரா பேராசிரியர்க்கிட்டே போயி ..சூழ்நிலையை சொன்னேன்..
அவரு உடனே "நானும் பாத்துகிட்டு தான் இருந்தேன்" அப்படினாரு.எனக்கு வந்ததே கோபம்.
நேரா பேராசிரியர்க்கிட்டே போயி ..சூழ்நிலையை சொன்னேன்..
அவரு உடனே "நானும் பாத்துகிட்டு தான் இருந்தேன்" அப்படினாரு.எனக்கு வந்ததே கோபம்.
"இந்நேரம் அந்த படகு கவிழ்ந்திருந்தா" ...?
"கஷ்டம் தான். யாரையும் காப்பாத்தி இருக்க முடியாது ..காப்பாத்த ஆளுங்க வரதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சுருக்கும்.ஆனா ...." (என்ன வில்லத்தனம் பாருங்க? )
"அப்போ ஏன் நாங்க கெளம்பும் போதே நீங்க தடுக்கலே" ..
"பொறு .. நான் இன்னும் முடிக்கலே.. ஆனா அந்த படகை பத்தி எனக்கு தெரியும் அது அவ்வளவு சீக்கிரம் கவிழாது .ரெண்டு நாளானாலும் அது மிதந்திட்டு தான் இருக்கும்".
ஹேய் ! என்ன சின்னபுள்ளைத்தனமா .. போ போ போயி பொழப்பை பாரு அப்படிங்கற மாதிரி அவரு எந்திரிச்சு போயிட்டாரு.
இங்கதான் நான் ஒரு விசயத்தை புரிஞ்சுக்கிட்டேன். ஒரு சில விசயங்களை பாத்து தேவை இல்லாமே பயப்படுறதை விட்டேன் . என்னதான் ஏரி ஆழமாகவும் ஆபத்தாகவும் இருந்தாலும் படகை அவர் புரிஞ்சுகிட்ட மாதிரி நாமளும் ஓரளவுக்கு சூழ்நிலையை புரிஞ்சு, நம்ம சக்திக்கு உட்பட்ட அளவு ரிஸ்க் எடுக்கலாமின்னு தெரிஞ்சது.
பெங்களூர்-ல இருந்து ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தனியா அரசாங்க பஸ்சுலே அதுவும் நைட்டுலே வர்றவங்க போறது ரிஸ்க் தான் .வெள்ளிகிழமை எப்பவும் கூட்டமா இருக்கும் . அதுலயும் நம்மளை மாதிரி வர்றவங்க நெறைய பேரு . காலையிலே இருந்து ஆணி புடுங்கின களைப்புலே தூங்கறவங்க ஜாஸ்தி .யாரும் அந்த இரவு பயணத்தை ஆபத்தாக்க மாட்டாங்க. ஆனா எப்பவும் எந்த பஸ் ஸ்டாண்டுலேயும் எறங்கி தனியா தான் நிக்க கூடாதுங்கிறதை புரிஞ்சுகிட்டேன் ... பஸ்சுக்குள்ளே இருக்கிறது தான் கொஞ்சமாவது பாதுகாப்பு .

எதுக்கு இப்படி தேவை இல்லாத ரிஸ்க் எடுத்துக்கிட்டு? பஸ்சுலே எப்போவும் முன்பதிவு பண்ணி தான் போவேன்னு சொல்றவங்களுக்கு நான் சொல்ல வந்த கருத்தை இப்படி பின் வருமாறு சொல்றேன் கேட்டுக்கோங்க .
For Example- கம்ப்யூட்டர் படிப்பு படிச்சதாலே நெறைய பேருக்கு பங்கு சந்தையை பத்தி நல்ல விதமா தெரியாது . அதுலே ஈடுபடவும் தயக்கம் .ஏன்னா அதுக்கு முன்னாடி அதுலே பணத்தை விட்டவங்க சொல்ற கருத்து தான். ஆனா பங்கு சந்தையை பத்தி அடிப்படை விஷயங்கள் தெரிஞ்சுகிட்டு ,நீண்ட கால முதலீடு பண்ணும் போது பங்கு சந்தையும் ஒரு ஆரோக்கியமான விஷயம் தான் . கண்டிப்பா ஆபத்தான விசயம் கெடையாது.
மக்களே, இதுனாலே நான் சொல்ற கருத்து என்னன்னா ..
"தேவை இல்லாத பயத்தை ஓரம் கட்டி வையுங்க. எந்த ஒரு ஆபத்தான விசயத்திலயும் measurable risk எடுக்கலாம்"
No comments:
Post a Comment