இந்த காலம் தெரியுமா உனக்கு ...
என்ன பெயர் வைக்கலாம் இதற்கு ?
...... நிலா காலம் .....கனா காலம் ...
என்பது போல் ..................
இது ................ தனிமை காலம் .....
இதோ .... மேகம் ,காற்று ...
குளிர் ,மரம் ,மரணம்
என கும்பல் ... சூழ்ந்த ...இடத்தில் நின்று கொண்டு
யாருக்கும் கேட்காதவாறு நான் என் தனிமையை பற்றி ...உரத்து பேசி கொண்டிருக்கிறேன் ...
ஒரு இருளுக்குள் ......நகரும் நாட்கள் ......
சுவாசிப்பது போலவே
நேசிப்பதை கூட நேர்மையாய் செய்தும்
ஏனிந்த தனிமை ..... ?
எதிர்பார்த்ததை விட
பெரிய பின்விளைவுகள்
ஏதும் ....தந்து விடாத தனிமை ......
ஊரார் திட்டுவார்கள் .. என்று ......
முதிர்ச்சி காட்டி நடிக்காமல் ....
அதே சமயம் அழுவதற்கும் கூச்ச படாத தனிமை .....
அழுவதினால் ஒன்றும் பயன் இல்லை ... ....
என்றாலும் அழுவதை தவிர
எதையும் .....கற்று நிற்காத தனிமை
காலாற நடக்கும் போதும் ....
கண் மூடி கிடக்கையிலும் ... தனிமை ....
கவலைகள் ... கனவுகள் ... ஏக்கங்கள் ....
எதையும் உள்ளே ஏற்க இடமன்றி .....
இந்த உலகம் நிரம்பி விட்டது போலான தனிமை ....
என் மூச்சு திணற வந்த தனிமை .......
உறங்குவதற்கு ஒரு மடியும் ...
ஆறுதலுக்கு ஒரு தோளும் .......
வந்து... வாழ்ந்துவிட்டு போன ... தனிமை
காலாவதியான காலத்துக்கு ...
களிப்புகளுக்கு .....
அஞ்சலி செலுத்தும் .....தனிமை ....
தனிமை ...என்பது சுகமானது ....தான்
ஆனால் நான் வாடும் இந்த தனிமை ...
சுய நினைவறுந்த
ஒரு வாழ்க்கையை பரிசளிக்க வந்தது
யாருமற்றது அல்ல .... என் தனிமை
மனிதர்கள் .... நிரம்பியது ....
கடந்த கால நினைவுகள் மட்டுமே தழும்புவது .........
நத்தைக்கு ஓடு புதிது இல்லை என்றாலும் ...
ஓட்டுக்கு வெளியே ....
ஒரு நாள் கொண்டாடிய சுதந்திரத்தை .....
சுகமாய் நினைவுபடுத்துகிற தனிமை
ஒரு மாபெரும் மாற்றம்
வந்து போன
வழி தடத்தின் தனிமையில் ...
புதிதாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ..
5 comments:
Superb! i know that u r good in writing kavitai but its really superb. Keep ur work and post more for us to enjoy.
madhumathy
அருமையான கவிதை சுபி. எனக்கு பிடித்தது இந்த வரிகள்தான்.
"சுவாசிப்பது போலவே
நேசிப்பதை கூட நேர்மையாய் செய்தும்
ஏனிந்த தனிமை ..... ?" தொடர்ந்து எழுதுங்கள்.
Really wonderful!!!
good, keep writing! . I am impressed! You have coalesced your feelings & words into this Kavithai.
“Loneliness” is time given by God to turn back and look our busy life, and praise God for giving wonderful occasions with our family, friends, environment etc.,
Else we can’t realize how beautiful our life is.
About the poem.. It is really fantastic. keep writing..
Me ur fan, looking for new one every time..
Post a Comment