கவனித்து கொள்ள ஆளில்லையெனில்
காய்ச்சலும்
கொண்டாட யாருமில்லையெனில்
பிறந்த நாளும்
வருவதில் அர்த்தமில்லை ..
இந்த அனுபவ மொழி
காலண்டருக்கோ ,கடிகாரத்துகோ
தெரிந்திருக்க நியாயமில்லை..
உனக்குமா .............??????????
ஒவ்வொரு நாளும்
நான் வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம்
அந்த நாளும்
என் வாசலும்
உன் வருகைக்காகவே ..
காத்திருப்பதாய் தோன்றும் .........எனக்கு !!!!!!!!!
நாம் சந்திக்கும் முன்
உன்னை தொலைத்ததாய்
ஞாபகமில்லை எனக்கு
இருந்தும் ...
என்னை
ஏன் அடையாளம் காண முடியவில்லை உன்னால் .?????
1 comment:
Vidaadhu peru mazhal pozhindha vaanam,
Indru amathiyaai irupadhu yen ?
- Maya
Post a Comment