Thursday, December 6, 2007

நம்பிக்கையின்றி வேறில்லை என்னிடம் !!!!!!!!!!!!!

புகுந்த வீடு , பிறந்த வீடு ,
கணவர் ,வேலை என
கடமையில் கருத்தாய்
நாள்தோறும் கடிகாரத்தை
நகர்த்தி கொண்டிருக்கும் ...கெட்டிகாரியே

நீ படிப்பாய் , பதிலளிப்பாய் என்று
தினமும் நான்
ஈ-மெயில்-கள் அனுப்புவதில்லை ..
உன் முகவரிக்கு .........
மெயில் பாக்ஸ் (mailbox) நிரம்பி விடும்போது ...
சில நேரம் படித்தும்..,படிக்காமலும் ....
அவசர அவசரமாய்
அழிப்பாய் என்பதை
அறிவேன் நான் ...

நிதமும் தொலைபேசியில்
உன்னை அழைப்பதெல்லாம்
உன்னோடு பேச வேண்டும் என்ற
நினைப்பில் அல்ல ...

எனக்கோ ஆறாவது, ஏழாவது அறிவுகள் .. இல்லை ...
நீ ம்ம்ம் என்றும்
சரி என்றும்
சாமர்த்தியமாய் .. சுருக்கி கொள்ளும் வார்த்தைகளின் ..
சாரத்தை கண்டுபிடிக்க ........................

ஒரு இருபத்து நாலு மணி நேர நாளில்
உன் சங்கடங்கள் மற்றும் சந்தோசங்கள் ........... ???????? என
தொல்லைபேசியாய் கேட்டாலும்
ஒன்றுமில்லை என
ஒரே வார்த்தையில்
வாயடைப்பு செய்து விடுவாய்

400 மைல் இடைவெளியில்
அந்தரங்கத்தையோ .. அல்லது
அலுவலையோ ..
காரணம் காட்டி
அமைதி காத்து விடுவாய் ...நீயும்

எல்லையை கண்டு எட்டி நிற்பேன்
நானும் சில நேரம் ...

ஆறி போன பின் காண்பிப்பாய்
சூடாய் இருக்கும்போது
சுட்டதென்று ஒரு இரும்பை...
சொன்னால் தாங்க மாட்டாய் என்றே
சொல்லாமல் மறைத்தேன் என்பாய்
நீ வலியில் துடித்த நிமிடங்களில்
நானோ தந்தி கம்பத்து குருவி போல் .....
நடப்பதை அறியாமல் ...
பேசி கொண்டிருந்த குற்ற உணர்ச்சியில் .........!!
இப்போது சொல் ..
அழியாத செல்வம் என்றாலும்
அலங்கார பொருளாய்
என் அன்பிருந்து என்ன லாபம்? ????

ஏது நடந்தது என்ற அறிவிப்புக்கும்
ஆறுதலை பரிமாற
வழிகளோ ,மொழிகளோ என்னிடம் இல்லை

பங்கு கொள்ள உன்னோடு ஆளிருக்கையில் ..
பகிர்தலை பற்றி கவலைப்பட்டுதான் என்ன .. ?

என்னால் எதுவும் செய்து விட முடியாது...
என்று தெரிந்து .....
தெளிவாய் புரிந்த பின்
நலம் விசாரிப்புகளின் மேலும்
நம்பிக்கை இல்லை ...

கதை கதையாய் எழுதினாலும்
காரணமாய் எழுதினாலும்...
கவிதையாய் சொன்னாலும்
எண்ணத்தை புரியாதவள் போல்
எப்போதும் நடிப்பவளை என்ன செய்வது ?


ஒவ்வொரு முறையும்
உன்னை வந்தடையும்
என் கடிதங்கள்
காலையும் மாலையும்
கானம் இசைக்கும்
என் தொலைபேசி அழைப்புகள்
உன்னை வாழ்வாங்கு வாழச்செய்யும்
பிரார்த்திப்பாய் ..............
வாழ்த்துகளாய்......
நம்பிக்கையின்றி வேறில்லை என்னிடம் !!!!!!!!!!!!!

3 comments:

Siva Thangavel said...

தனிமையை தனதாக்கி மனம்
உருகும் பெண் ஓருத்தி
மனதிடம் மன்றாடி மணம்
முடிக்கும் ஒரு தேதி
வந்தாலே இக்கவிதைகள் பொய்யாகும்
பொய்யிலே பிறந்தவர் புலவர் என்று மெய்யாகும்

suji said...

hi subi,super i think this is yr experience right(i know).......bcoz i also like u&yr friendship.........if u dont mine send mail 2 my id.i know (atleast small)yr feelings.....k akka this suji(premi)..........keep it up yr writing skill,(all the best).sorry for hi subi.......bye

Anonymous said...

nalla iruku suabthra.. i dont know wat else to say... i know this would have come out of your experience...seriously.. i have been thinkin y gals are unable to stay in touch even if we have the means. what makes them go apart?? i too have been searching for an answer...