Wednesday, August 20, 2008

உனக்கு தெரியுமா ..

எந்த ஒரு இடத்திலும்
எத்தனை
பிரியமான ஒருவருடைய இழப்பை ,பிரிவை
எதிர்கொள்ளும் போதும் ..
கட்டுபாடின்றி ஓரிரு நிமிடங்கள்
நீ அழுது விட்ட போதும் ...
எப்போதும் பேசும்
உன் வார்த்தைகள் மட்டும் நினைவுக்கு வருகிறது ..

எவரை பிரிந்தாலும்
எந்த ஒரு மரணத்தை
கண் எதிரே சந்திக்கும் போதும் ..
யாரேனும் கதறி கொண்டிருக்கும் போதும்
சர்வசாதாரணமாய்
அனுபவசாலிகள் தோற்க
அழகாய் நிதர்சனம் பேசுவாய் ...
"கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் ..
அப்புறம் போக போக சரி ஆகிவிடும்
மனதுக்கு மறந்து... மரத்தும் விடும் ..........."
உனக்கு தெரியுமா .. ???
அப்போதெல்லாம் நான் வியந்திருக்கிறேன் ....
நீ பெற்ற அனுபவம் எப்படி பட்டதென்றும் ...

உன் காயங்கள்
எத்தனை கொடிதென்றும்

ஆனால் .. எல்லாம் சொன்னாயே ..
முக்கியமானதொரு உண்மை புரிய மறந்தாயோ

உன்னை போல்
அனுபவங்கள்-அறிவு கொண்டிருக்கவில்லை ..
நீ தான் என் அனுபவமே .....

உன்னாலே கிடைத்த கிரீடங்கள்
எத்தனை புதிதோ !!!!!
அதே அளவு
எனக்கு ....என் அழுகையே புதிது ....

நானும் சொல்கிறேன் .. கேள் ..
நீ அருகில் இல்லாதது ..
இந்த பிரிவுகள் ....
பெரிய இழப்பாய் இல்லை ..தான்

தானே செத்த பின்
தனக்காய் அழ முடியாது என்பதால் ...
ஒவ்வொரு உயிரின் மரணத்திலும்
உரிமை தனிமை,
ரத்தபாசம் ,நேசம் நெருக்கம் என
கணக்கில்லாத காரணங்களால்
கண்ணீர் விட்டாலும்
மனிதன்
தன் மரணத்தை நினைத்து
தனக்காகவும் ....ஓரிரு நிமிடங்கள் அழுவதை போன்றது
என் உண்மை

நீ என்னையோ .. அல்லது
நான் உன்னையோ ..
மறந்து விட போவதற்காக அழவில்லை...

மரங்கள் அடர்ந்த சாலையில்
எதிரெதிரே சந்தித்து கொண்ட போதும்
மறந்ததாய் நடித்து ..கண்டுகொள்ளாமல்
அவசரமாய் கடந்து போக வேண்டி இருக்குமே என்றுதான்
இந்த அழுகை ...
சற்று முன்னதாகவே ...

அப்போது கண்ணீர் விட
சில கட்டாயங்கள் இருக்குமென்றாலும் ...........

அது போக

பிரிந்து போன இடத்திலா .. சந்திக்க போகிறோம் ...
இல்லை ..பல்லாயிரம் மைல்கள் கடந்து ...
உருவங்கள் , ரசனைகள் ... மாறி ...
புதிய உறவுகளோடு ....
ஒருவரை ஒருவர் அடையாளம் கண்ட பின்னும்
தேடிக்கொண்டே இருப்போம் ...

2 comments:

Sam Jr said...

நான் கவிதை படைப்பாளி அல்ல வெறும் ரசிகன்.
உன் கவிதையை ரசிக்கவும் தெரிந்தது.
அதன் சோகத்தை உணரவும் முடித்தது...

கனவுகளோடு வாழ தெரித்த உனக்கு
நினைவுகளோடு வாழ தெரியாதா என்ன....

Sam Jr said...

உறக்கத்தில் வருவது கணவு
எப்பொழுதும் நிறைத்திருப்பது நினைவு