மனம் பழக்கங்களின் அடிமை ... !!!!!!!!!!!!
இதோ ..
பள்ளி காலத்தில் இருந்து
கவனித்து பாருங்கள் புரியும்
இரண்டு மாத விடுமுறை முடிந்து ...
பள்ளிக்கு போவதற்கு சிணுங்கும் ..
படித்த பள்ளியை ,கல்லூரியை
பழகிய மனிதர்களை ..என
ஒவ்வொரு பிரிவிலும் ,
ஒவ்வொருவரை பிரிகையிலும்
கண்ணீர் வடிக்கும் ...
இது ....வெகு நாட்களாய் பழகிவிட்ட பின் ...
புதியதை சந்தித்து
ஒரு புதிய ஆரம்பத்தை தொடங்குவதற்கு
தயங்கி நிற்கும் ......
பழக்கத்தில் சுகம் கண்ட சோம்பேறி ..மனம் ...
மரணத்தையும், காலத்தையும் தவிர
பெரியதொரு மாற்றங்களை .............
முயற்சியுள்ள மனதுக்கு
எவரும் ,எப்பொழுதும்
கொடுத்து விட முடியாது என்ற
உண்மை தெரிந்தாலும்...
காரணங்களை பிடித்து கொண்டே
கவலைகளில் மூழ்கி திளைக்கும்
வயது ஏற ஏற
கடந்த காலத்தை ....வசந்த நினைவுகளை
திரும்ப திரும்ப பேசி.......
நிகழும் காலத்தில் நடப்பவைக்கெல்லாம்
புகார் பட்டியல் வாசித்து நிற்கும்....
எடுத்ததற்கெல்லாம் எதிர்காலத்தை நினைத்து
கலங்கி நிற்கும் ...
வாலிபத்தில் ,குழந்தை பருவத்துக்கும்
வயோதிகத்தில் ,வாலிபத்துக்கும்
ஆசைப்பட்டே அழிந்து போகும்
கடந்த காலத்தின்
தோல்விகளில்... மோதி மோதியே
காயம்பட்டு .........
இம்மியளவும் முயற்சிக்காது
காப்பாற்ற ஆள் தேடி .....
அதிர்ஷ்டத்தை ...அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கும்
கீரைகாரியிடம் பேரம் பேசும் மனம்
கௌரவத்துக்காய் கணக்கு பார்க்காமல்
Pizza hut-களில் பணம் கட்டி வரும்
யாரில்லாமலும் .............யாரும் வாழத்தான் வேண்டும் என்பதை மறந்து நானில்லாமல் இவர்கள் என்ன செய்வார்கள்
அவர்கள் என்ன செய்வார்கள்??? ... என்ற நினைப்பை எடுத்து
தனது கோழைத்தனம் மறைத்து நிற்கும் ...........
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து நினைத்தே நேசிப்பவரை நெருக்கடிக்கு உள்ளாக்கும்
ம்ம் என்றால் நம்பிக்கை இழந்து விட்டு
இயலாமையின் தோள்களில் சாய்ந்து கொள்ளும்
இள ரத்தம் ஓடுகையில் ...
முதியோரின் காரணம் கேட்டறியாத
கண்மூடித்தனமான பின்பற்றுதல்களை
கேலி செய்யும்
அதே மனம்...
முதுமையில்...
பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காது....
பற்றி கொள்ள ஒரு நம்பிக்கை தேடும்...
வீட்டுக்குள் தொலைத்ததை எல்லாம்
வாசலில் தேட .......
புகழ்ச்சிக்கு ,மரியாதைக்கும் மயங்கி ....
எட்டியே நில் என்று எவரையும் சொல்லாது
எல்லார்க்கும் இடம் கொடுத்து விட்டு
நெருக்கடியில் மாட்டிக்கொண்ட பின்
நினைத்தவரை எல்லாம் குற்றம் சாட்டி
நீதிமானாய் காட்டி கொள்ளும்
பெரிய அளவில்
புத்திசாலிதனமாய் ஏமாற்றுபவர் கண்டால்
ஏமாந்ததை கூட
யாருமறியாமல் மறைத்து கொள்ளும் . .
சிறிய அளவில் செய்து
அகப்பட்டவனையோ .....அடித்தே கொள்ளும்
அடுத்தவருக்கென்று அறிவுரைகள் வகுத்தாலும்
தனக்கென்று வருகையில்
தடுப்புகளை கூட உடைத்தெறிந்து
ஓட தயாராகும்
எல்லாரிடத்தும் முக்கியத்துவம் தேடும்
ஏகபோக அரசியல்வாதி
வேலை இருக்கும் போதெல்லாம்
ஒய்வு தேவை என்று
ஓயாது புலம்பும்
சும்மா இருக்கும் போதோ.
ஓய்வை யோசிக்காது ..
ஒவ்வொரு
திங்கள்கிழமை காலையும்
அலுவலகம் போகையில்
ஞாயிற்றுகிழமை வீணாய் போனதாய்
விளம்பரப்படுத்தி கொண்டிருக்கும்
ஊரெல்லாம் ஓடி
உலக அறிவெல்லாம் கற்று
உள்ளுக்குள் கவனியாது .. வாயாடி கொண்டிருக்கும்
செத்த பின்னால் என்னாவோம் என்ற பயத்தோடு
கடவுள் வந்து கண்ணை குத்துவதாய்.....
காவி கட்டியவனிடமெல்லாம்
தேடி தேடி ..கதை கேட்கும்
சொன்னவரை எல்லாம் தெய்வம் என்று மதிக்கும்
உயிரோடு இருக்கும் போது
உருப்படியாய் வாழ நினைக்காது.. !!!!!!!!!!!
-பூந்தென்றல்
1 comment:
:-) கலக்கறீங்க போங்க...மனச பத்தின எல்லா விஷயமும் உண்மைதாங்க.... நம்மள மாதிரியே நிறைய பேர் இருக்காங்க போல !!!
:-)
//சிறிய அளவில் செய்து
அகப்பட்டவனையோ .....அடித்தே கொள்ளும்..// - இங்க கொல்லும்னு வரணுமோ !! ?
Post a Comment