Friday, October 30, 2009

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் கொங்கு அழிந்தால் எங்கும் அழியும்

"கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
கொங்கு அழிந்தால் எங்கும் அழியும்"
இப்படி தாங்க நானும் இந்த பழமொழியை பெருமையா சொல்லிட்டு திரிஞ்சேன்
பின்ன  நாம தான் ஈரோட்டு சிங்கமுல்ல.. கொங்கு தமிழில் பேசி கர்நாடகாவை  கலக்கறமுல்ல...
இந்த சிங்கம் அசிங்கமானது ஒரு ஜேடர்பாளையத்து தங்கத்துனால தாங்க....
(முன்குறிப்பு)இதெல்லாம் எங்க ஊட்டுக்காரர் சொன்னதுங்கோ........
இங்கே கொங்கு என்பது தேனை குறிக்கிறது. தேன் செழிக்க தேனீக்களுக்கு என்ன வேண்டும்? மலர்கள் ,சோலைகள் . சோலைகள் ,காடுகள் செழித்தால் மழை ,மற்றும் நீருக்கு குறைவிருக்காது .இவை எல்லாம் இருந்தால் விவசாயம் செழிக்கும் . விவசாயம் செழித்தால் மற்ற தொழில்கள் செழிக்கும். மக்கள் வாழ்க்கை செழிக்கும்
 அவரு ஒரு கதை கூட சொன்னாருங்கோ...
அவ்வையார் ஒரு மன்னனை வாழ்த்த விழையும் போது.இப்படி சொன்னாராம்
"வரப்பு உயரும் .."

கேட்டவங்க எல்லார்க்கும் ஒரே சந்தேகம் ...என்னடா இது வாழ்த்த சொன்னா..நல்லா இருப்பே ... இல்லே நாசமா போயிருவேனு வாழ்த்தாம ...இப்படி வரப்பு உயரும் .. வாய்க்கால் உயரும்ன்னு இந்த அம்மா  சம்பந்தமே இல்லாம சொல்றாங்களேன்னு......
வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்
மழை பெய்ஞ்சு தண்ணீர் போனா வயல்ல நிறைய பாயட்டும்ன்னு வரப்பை உயர்த்தி கட்டுவாங்க..நீர் நிறைய கிடைக்க பெற்றால் பயிர்கள் செழிக்கும்..விவசாயம் செழித்தால் மக்கள் செழிப்பர்..மக்கள் செழிக்க மன்னன் செழிப்பான்.

1 comment:

venkat said...

நல்ல பதிவு, படித்தவுடன் நிறைவாக இருந்தது.