Thursday, October 18, 2012

நானொரு நல்லவன்


பிரிவுகளை பற்றி கவலைபடுகிற நிலையில் நானில்லை
சேர்ந்திருப்பது பற்றி தெரியவில்லை
காதல் என்றவுடன் மதில் மேல் பூனை
பிள்ளை வளர்ப்பு மற்றவர் கவலை
மனைவி என்பவள் சுமக்கட்டும் தொல்லை
என் கையில் எதுவும் இல்லை 
 
 
 நீண்ட பயணம்
தொந்தரவில்லா தூக்கம்
தென்னை மரத்து இளநீர்
கட்டி தயிர் 
கறியோடு சோறு     
பெற்றவருக்கு செல்ல பிள்ளை
கழியும் ஞாயிறு

 
நகர்புறத்தில் வீடு
நாடறிந்த தனிமை
துணைக்கு தொலைக்காட்சி
உணவகங்களுக்கு நண்பர்கள்
மாத சம்பளம்
வாரமொரு முறை வழிப்போக்கன் விஜயம்     
 
அசதி,மறதி,அறியேன் என 
காரணம் சொல்லி எங்கிருந்தும் தப்பிப்பேன்
நானொரு நல்லவன்

No comments: