Thursday, October 18, 2012

சிறு துளிகள்

எல்லைகளை மீறி
என்னை  வருத்தி
எல்லாமும் செய்கிறேன்
உன்னால் மட்டும் தான்
சில நேரங்களில்
முதுகை வளைக்காமல் முட்டியை தொட
வசதியான வழியொன்றை கண்டுபிடித்து
சிலாகித்து கொள்ள முடிகிறது 
 
 
********************
 
 

வெயில் அடிக்கிறது என்று -காரோடு
வெளியே வர மறுக்கிறாய்  
இரண்டு சக்கர வாகனத்தில்
தனியே போக என்னை பணிக்கிறாய் 
நீ யாரை பாதுகாக்கிறாய் -புரிவதே இல்லை
எப்போதும் எனக்கு
உன்னையா, உன் காரையா , காசையா ?  
 
 
******************************
 
 
ஓரிரு வார்த்தைகளில்
எளிதாய் சொல்லி விட முடிகிறதென்றாலும்
ஓராயிரம் செயல்கள் செய்து

ஒரு நாள் நான் உணர்த்துவேன்

என் அன்பை

உனக்கு

 

No comments: