Thursday, October 18, 2012

எங்கே

யாரிட்ட சாபம்...
ஏனிந்த பிரிவு?

தாயை பிரிந்த கன்றாய்
நீ அழுத கண்ணீர்  ஊரறியும்

உனக்கு பிரிவளித்த பழி ..
உன்னை பிரிந்த வலி ..
இவற்றுக்கு
நான் வரித்த கண்ணீர்
நால்வர்கே   தெரியும்
நான் பெற்றவன்
உன்னை பெற்றவள்
என்னை பெற்றவள்
நம்மை படைத்தவன் !

********************


இரண்டில் ஏதாவது ஒன்று
உனக்காக வாழ்வது
உன்னோடு வாழ்வது
 

என்ன வேண்டும் என்று
உனக்கு கேட்க  தெரியாத பருவத்தில்
உன்னோடு இருந்து விட்டேன்
இனி உனக்காக வாழ்வது என்று
முடிவெடுத்தே இங்கு வந்தேன் 




********************

 


அறியாத குழந்தை ,
விளையாட்டு பருவம்,
நீ அழாமல்  இருக்கிறாயா என்று கேட்கிறார்கள் ..


தாங்க முடியாத சோகத்தோடு
தவிர்க்கவே முடியாத பிரிவென்று
பெருந்தன்மையில் பெரிய மனிதர்கள் தோற்க  
கையசைத்து ,
கண்ணீரில்  சிரித்து
நீ எனக்கு விடை கொடுக்கும் நிமிடங்களில்
கனக்கிறது இதயம் ..


உன் பெயரை சொல்லி
தொலைபேசியில் அழைக்கையில் 

அம்மாவென...
 நீ வீறிட்டு அழும்போது
குற்ற உணர்ச்சியில் குறுகுறுக்கிற இதயம்

நெரிசல்கள் மிகுந்த நகர வாழ்வில்
ஒரு நாள்
கால்களில் செருப்பில்லாத பெண்ணொருத்தி 
தன்  மகளை தோள்களில் வைத்து
கூத்தாடி கொண்டு போனதை
இப்போது நினைத்தாலும் 


கரையை உடைத்து
என்னை கண்ணீரில் கவிழ செய்கிறது  

இத்தனை படித்தென்ன ?
எத்தனை பணம் செய்தென்ன  ?



 







*******************************



வாரம் தவறாமல் என் வருகையும்
சில விளையாட்டு சாமான்களும்
உனக்கு தேவையான பழங்களும் ,பொருட்களும்
பூங்காவில் ஊஞ்சல் நேரமும்
கோயில் தரிசனமும்
வீதி ஊர்வலமும்  

உனக்கு நகம் வெட்டி
எண்ணையிட்டு தலை குளித்து
இதமாய் உன் தலை கோதி
தாலாட்டு பாடி 
உன்னோடு விளையாடி
சோறு ஊட்டி  ...
 ஒரு தூர தேசத்தில் 
கடமையை ....காசுக்கு அடமானம் என்றே
வைத்த அவமானம்
கொல்கிறது என்னை   ....


********************


ஏன் பிரிந்தாய் ?............
என்னை கேள்வி கேட்பதற்கும் ...
மன்னிப்பதற்கும் ,
தண்டிப்பதற்கும்
மறுக்க முடியாத உரிமை
உன் ஒருவனுக்கே .....
ஒரே நிமிடம் எனக்கு தாயாய் இருந்து
என் கடந்த காலத்தை திரும்பி பார்த்து விட்டு வா 

*************************



No comments: