Friday, November 23, 2012

கவனமாய் இரு


எத்தனை வேகமாக வண்டி ஓட்டினாலும் , கோபத்தினால் நிதானம் இழந்தாலும் ,மனமொடிந்து நின்றாலும் ...................

அபாய மணியை ஒலிக்க  தொடங்கி விடும் ......அம்மாவின் வார்த்தைகள் ..

இது என்ன இலக்கணம் என்று எனக்கு புரிந்ததில்லை ..ஆனால் பொருள் மட்டும் பசுமரத்தாணியை போல் பதிந்து விட்டது 


"மன்னவனுகொரு மகாராணி...... மதித்தால் கிடைத்து விடும் ,

மனமறிய வாய்த்து விடும் ..

மக்களுக்கு ஒரு தாயார் எப்போதும் கிடைப்பதில்லை .."


இந்த உலகத்துக்கு 
உன் மூலமாய் 
நீ கொண்டு வந்த ...ஒரு உயிருக்கு..
உன்னாலான அன்பையும் ஆதரவையும் ...
நீயே எடுத்து கொண்டு 
திரும்பி வர முடியாத   இடத்துக்கு 
எங்கோ போய் விடாதே ...

எத்தனை பேர் இருந்தாலும் 
அம்மாவின் அருகாமையை ஈடு செய்ய முடியாது 






No comments: