தாய் பாசம்
அம்மா அம்மா தாய் பாசம் என்றால் என்ன ? இந்த மாதிரி கேள்வி எல்லாம் என்னாலே தான் கேக்க முடியும் ..
இதை கேக்கும் போது நான் எட்டு மாத கர்ப்பிணி . தினமும் ஒரு முறையாவது இதை கேட்பேன் .அம்மாவுக்கு இதை கேட்டவுடன் சிரிப்பு வந்து விடும்.. பதில் ஏதும் சொல்லாமல் நகர்ந்து விடுவார்
வார்த்தைகளாய் கேட்டால் தான் எதுவும் புரிந்தது போல இருக்குமோ ?
ஒரு சந்தர்ப்பத்தில் அனுபவ அறிவு நிறைந்த ஒரு கிராமத்து தாயின்
வார்த்தைகளை தன் மகளுக்கான கண்ணீரில் கேட்க நேர்ந்தது ...
காருல , தேருலன்னு எதுலயும் உன்னை கூட்டி போக முடியலேனாலும் நடந்து கூட்டிட்டு போய், நடந்தே கூட்டிட்டு வந்திருப்பேனே ஆதரவா
...இப்படி உன்னை கைக்குழந்தையோடு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி அனாதரவா விட்டு போனானே ..
...இப்படி உன்னை கைக்குழந்தையோடு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி அனாதரவா விட்டு போனானே ..
ரெண்டு கிலோமீட்டர் நடந்து காய்ச்சல் கொதிக்கிற குழந்தையோட , கண்ணு கலங்கி தனியா வர வச்சானே அந்த பாவி ...
தாய்மை என்பது துணிச்சல் ,தெய்வ நிலை ,தியாகம் ,வீரம்
தாய்மை என்பது துணிச்சல் ,தெய்வ நிலை ,தியாகம் ,வீரம்
No comments:
Post a Comment