வானத்தில இருக்கிற நிலா ,நட்சத்திரம் ,மேகம் எல்லாத்தயும் பார்த்த உடனே தினப்படி வாழ்க்கை நியாபகம் வந்துரும்.இங்கே எத்தனை பேருக்கு வானத்தை அண்ணாந்து பார்க்கிற வாய்ப்பு கெடைக்குது.அது சரி காலையிலே போனாலும் ஆபிசுல வெளக்கு எரியுது ,சாயந்திரம் கிளம்பும் போதும் அதே வெளக்கு எரிஞ்சுகிட்டு தான் இருக்கு..
நம்ம பொழப்பு இரவுக்கும் ,பகலுக்குமே வித்தியாசம் தெரியாம போகுதுனு பொழம்பறீங்களா...இப்படி தாங்க நானும் யோசிச்சிட்டு இருந்தேன் ...
தீடீர்னு ஒரு கேள்வி வந்துருச்சு எனக்கு.ஒரு நாள் பார்த்தா மேகம் எல்லாம் ரொம்ப பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கும் ,மறு நாள் பார்த்தா ரொம்ப தூரமா இருக்கும் ....
பெரிய யோசனை எல்லாம் பண்ணி பார்த்தேன்.ஒன்னும் வெளங்கலை...
அந்த நேரம் பார்த்து நம்ம பயபுள்ள என்டிரி ஆனான்.
"சீக்கிரம் வா சாப்பிடலாம்" ..அம்மா கூப்பிடுது ...
"நீ போடா நான் இப்போ தான் யோசிக்கவே ஆரம்பிச்சிருக்கேன்"....
"என்ன பிரச்சனை உனக்கு "
"மேகம் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி தெரியுதுல்ல ...அதான் பாத்துட்டு இருக்கேன்"
"ஓ அதுவா மேகத்துல பல வகையுண்டு... நான் பாடத்துல படிச்சிருக்கேன்...சரி சரி போதும் வா" சொல்லிட்டு அவன் போயே போயிட்டான்...
"அப்படியும் இருக்குமோ ??"
"நாம படிக்கும் போது இதெல்லாம் பாடத்துல இல்லவே இல்லியே..."
இப்போ சேர்த்துருப்பாங்க போல !!! யாரு கண்டா...
அப்படினு நழுவீரலாம்னு பார்த்தா மனசாட்சி வேற.. இப்படி குரல் கொடுத்துருச்சு....
"இதுக்கு தான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கனும்கிரது...."
கொஞ்சம் ரோஷம் வந்து Google-le தேடி பார்த்தேன்....
இதோ இப்படி எல்லாம் சொல்றாங்க.....
Cloud types are divided into two general categories: layered and convective. These names distinguish a cloud's altitude. Clouds are classified by the base height, not the cloud top. This system was proposed in 1802, when it was presented to the Askesian Society by Luke Howard.
High clouds (Family A)
Cirrocumulus
Cirrus
Cirrostratus
Middle clouds (Family B)
Altostratus
Altocumulus

Low clouds (Family C)
These are found up to 2,000 m (6,500 feet) and include the stratus (dense and grey). When stratus clouds contact the ground, they are called fog.
Clouds in Family C include:
Cumulus[2] (Cu)
Cumulus humilis
Cumulus mediocris
Stratocumulus (Sc)
Nimbostratus (Ns)
Stratus (St)
A cumulus cloudscape over Swifts Creek, Victoria, Australia

Vertical clouds (Family D)
A typical anvil shaped Cumulonimbus incusThese clouds can have strong up-currents, rise far above their bases and form at many heights.
Clouds in Family D include:
Cumulonimbus (associated with heavy precipitation and thunderstorms) (Cb)
Cumulonimbus calvus
Cumulonimbus incus
Cumulonimbus with mammatus
Cumulus (Cu)[3][4]
Cumulus congestus
Pyrocumulus
Other clouds
A few clouds can be found above the troposphere; these include noctilucent and polar stratospheric clouds (or nacreous clouds), which occur in the mesosphere and stratosphere respectively.
Some clouds form as a consequence of interactions with specific geographical features. Perhaps the strangest geographically-specific cloud in the world is Morning Glory, a rolling cylindrical cloud which appears unpredictably over the Gulf of Carpentaria in Northern Australia. Associated with a powerful "ripple" in the atmosphere, the cloud may be "surfed" in glider aircraft.
http://en.wikipedia.org/wiki/Cloud
நம்மளை விட சின்னவங்க கிட்டே இருந்து கத்துக்கும் போது இருக்கிற சந்தோசமேய் தனி தாங்க.அதுவும் அவங்க நம்ம மகன் மகளா இருந்துட்டா உடனே திருக்குறள் நியாபகம் வந்துருச்சுங்க
'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னேற்றான் கொல் எனும் சொல்' .... அதற்கான விளக்கம் -மகன் தந்தைக்கு செய்யக்கூடிய உதவியானது, இவருடைய தந்தை இவரைப்பெற என்ன தவம் செய்தாரோ என்ற அளவுக்கு இருக்கனுமாம்.....
5 comments:
prema pothumaa... intha post....
சூப்பர் போஸ்ட்! ரொம்ப இயல்பா எழுதறீங்க.
//"நாம படிக்கும் போது இதெல்லாம் பாடத்துல இல்லவே இல்லியே..."
இப்போ சேர்த்துருப்பாங்க போல !!! யாரு கண்டா...//
:)))))))
நமக்கெல்லாம் இந்திய பூகோள வரைபடத்தை பகுதி குறிப்பிட்டு, அதோட தட்ப வெட்ப நிலை படிக்கறதோட சரி. "tell me why" மாதிரி படிப்பு அப்போ எங்க! பசங்க கிட்டேருந்து நிறைய கத்துக்கும் போது பயங்கர குஷியா இருக்கு :D
ரொம்ப ரசிக்கும்படியான, தகவல் நிறைந்த பதிவு. வாழ்த்துக்கள்
romba nandringa Shakthiprabha.
akka,naan sonnathai ipadiyaa vilambaram panrathu.....
poonthendralsuba.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading poonthendralsuba.blogspot.com every day.
payday cash advances
bad credit loans
Post a Comment