Wednesday, September 9, 2009

சாந்தாரா

ஜைன மதம் உலகுக்கு நிறைய போதித்து இருக்கிறது. அதில் ஒன்று சன்யாச மரணம் -சாந்தாரா- சமாதி மரணம்

மரணத்தை விரும்பி ஏற்பது.இது தற்கொலை அல்ல.தற்கொலை என்பது உணர்ச்சி வேகத்தில் வாழ்வை வெறுத்து , ஒருவர் தன்னை கொலை செய்து கொள்வது.சிந்தனை திறன் இழந்து , கோபம்,ஆத்திரம்,தோல்வி இன்னும் எத்தனையோ காரணிகள் ஆக்கிரமிக்க செய்வது. தற்கொலை சட்டத்துக்கு புறம்பானதாக கருதப்படுகிறது.

ஜைன மதமும் தற்கொலையை வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து தப்பித்து கொள்ளும் ஒரு முயற்சியாக கண்டிக்கிறது.

ஆனால் ஒருவர் வாழ்ந்தது போதும் என்றெண்ணி ,தன் வாழ்வின் கடமைகள் முடிவுற்றதாக உணவு ,நீர் ஆகியவற்றை துறந்து மரணத்தை தழுவுவது இந்த மதத்தில் ஏற்றுகொள்ளப்படுகிறது.


இந்த சாந்தாரா என்பது தன்னை தானே பாவங்களில் இருந்து ஒருவர் தூய்மை படுத்தி கொள்ள மேற்கொள்ளபடுகிற முறையாகும்.

மரம் ஓர் அறிவுள்ள உயிர் என்றாலும் அதிலிருந்து காய்,கனிகளை எடுப்பதுவும் பாவ செயலாக கருதப்படுகிறது.மரத்தில் எத்தனையோ நுண் உயிர்கள், அதே காய் கனிகளை உணவாக கொண்டு வாழ்ந்திருக்க கூடும்.அந்த காய் கனிகளை உண்ணுவதன் மூலம் நாம் மரம் மற்றும் அதை சார்ந்த உயிர்களை துன்புறுத்துவதாக பொருள். நீரை அருந்துவதன் மூலம் அதிலிருக்கும் உயிர்களையும் கொன்று பாவத்தை மேலும் சேர்ப்பதாக ஜைன மதம்
போதிக்கிறது.


மனிதன் தன் வாழ்நாள் முழுமைக்கும் செடி,கொடிகள்,மற்ற உயிரினங்களையே சார்ந்து வாழ்வது தவிர்க்க முடியாததென்றாலும் ,தன் கடமைகள் முடித்த பின் சாந்தாரா முறையில் இவ்வாறு மரணத்தை ஏற்க இந்த மதம் அறிவுரைக்கிறது.

No comments: