Thursday, February 14, 2008

காதலர் தின சிறப்பு மலர்

மலர்கள் ,மரங்கள் ... மலைகள் ...
காடுகள் .. கடல்கள் ..
மழை , அருவி ....
இவை மாத்திரமே ..
இயற்கை என்று ...
தேவதை நீங்கலாய்
யாரோ வகுத்து விட்டார்கள் ..

கவிதைகள் ... கதைகள் ..நாடகம் ..
இவையே ..இலக்கியம் என்று
யாரோ வகை பிரித்து ...
போய்விட்டார்கள் ..

அந்த யாரோவுக்கு தெரியவில்லை ..
நீ பிறக்க போகிறாய் என்று ...

அந்த யாரோவுக்கும்
அந்த யாரோ சொல்லி போனதை
பின்பற்றும் எல்லாருக்கும் தான்
உன் இருத்தலை
இப்படி ...எடுத்து சொல்லி கொண்டிருக்கிறது ..
என் காதல் !..

1 comment:

Anonymous said...

Ilakkiya dhevathaikkagha
Ullam urugi kavithai
Ezhudhum rasigaiku
Naan rasigai.

-- Maya