தனிமை கொடுமையென்று
நான் சொல்லி வருவதை கண்டு
இத்தனை பேர் உன்னோடு இருக்கையில்
தனிமை எங்கிருந்து வந்ததென்றும் ...
இது போன்ற பிரிவுகள்
வாழ்வில் சகஜம் ..
இதற்காக எதற்கு வருத்தப்படுகிறாய்? -என்றும்
எல்லாரும் கேட்கிறார்கள் ..
தனிமை என்பது தனித்து இருப்பதல்ல ..
நீயின்றி இருப்பது ..
நீ தந்த நினைவுகளில்
என் நிகழ்வுகள் கனப்பது ....
உன்னை போல ஒருத்தி ...
வந்து போன பின்
வாழ்வின் மிச்சங்களை
மீண்டும் தொடர்ந்து கொண்டிருப்பது ..
தேடி கிடைத்த அன்பை
கடமை , காலம் என
நீளும் பட்டியல் நடுவே
தொலை தூரத்து சொந்தமென்று ..
பார்த்து கொண்டிருப்பது .....
No comments:
Post a Comment