Thursday, February 14, 2008

ஒன்றுமில்லை ,சரி , அப்புறம் ...!!!

ஒன்றுமில்லை ,சரி , அப்புறம் ...
இப்படி ஒற்றை வார்த்தைகளில்
எத்தனையோ காரணங்கள் .. கொண்டு ...
நான் ஆரம்பிக்கும் ...
ஒரு நீளமான உரையாடலையே
எப்படி உன்னால் மட்டும் முடித்து வைக்க முடிகிறது? ...

ஒன்றுமில்லை என்று சொல்லுவது சுலபம் தான் ..
ஆனால் அந்த ஒன்றுமில்லை-க்கு பின்னால்
எத்தனை ஒளித்து வைக்க வேண்டி இருக்கிறது ...
தெரியுமா உனக்கு ?
என் ஏக்கங்கள்,
சின்னச்சின்னதாய் சில எதிர்பார்ப்புகள் ...
உன் அருகாமை வேண்டி...
தவிக்கும் குழந்தைத்தனம் ....எல்லாமே .............

அப்புறம் என்று
அடுத்த வார்த்தைக்கு அடியெடுத்து ....வைத்து ...
எத்தனை விஷயங்கள் மென்று முழுங்க
வேண்டி இருக்கிறது தெரியுமா?
நாம் பிரிந்தது முதல் ......
இன்று நடந்தவை வரை ....
ஆனாலும் எதுவுமே சொல்லாமலும் .. சொல்ல முடியாமலும் ... போனதற்கு ..தண்டனையாய் ..
சரி என்று ... சொல்லி
தொலைபேசியின் தொடர்பை .. துண்டிக்கிறேன்

1 comment:

SanSiv said...

வேறொன்னுமில்ல,அப்பறம் ,சரி
ன்றதெல்லாம் லவ் பண்றவங்களுக்குன்னே ஏற்பட்டதுங்க...

அத வச்சு சோகமா ஒரு கவிதை எழுதிட்டீங்களே... :-( நியாயமா ?