- ஊரெல்லாம் ஏமாந்து வருவார் ..ஆனால் ஒருவன் பெற்ற மகளை உருப்படியாய் ஏமாற்றுவார். அவர் யார் ? கணவன்மார் தான்
- ஆத்திரப்பட்டு பேசறதாலே அம்மாக்கள் எல்லாரும் கெட்டவங்களா, சண்டைகாரங்களா தெரிவாங்க.. அமைதியா கேட்டுகிட்டு தலைகுனிஞ்சு உட்கார்ந்திருக்கிறதாலே அப்பாக்கள் எல்லாரும் நல்லவங்களா தெரிவாங்க.மக்களே ஏமாந்துராதீங்க ! கொஞ்சம் Flashback பத்தி அம்மாகிட்டே கேட்டு பாருங்க..
Wednesday, February 24, 2010
மனைவி மொழிகள்
ஒரு முரண்பாடு
உன் தலைவலி கூட
ஒரு தலைப்பு செய்தி தான்
நம் வீட்டில் ...
நம் பிள்ளை அழுதால்
ஊரே கேள் நாடே கேள்
அழுவது என் தங்கம் என்று
ஒளிபரப்பே செய்வாய் ....
என் தலையே போனாலும்
அது ஒரு வரி செய்தியாய்
உனக்கு மட்டும் ...!!!
ஒரு தலைப்பு செய்தி தான்
நம் வீட்டில் ...
நம் பிள்ளை அழுதால்
ஊரே கேள் நாடே கேள்
அழுவது என் தங்கம் என்று
ஒளிபரப்பே செய்வாய் ....
என் தலையே போனாலும்
அது ஒரு வரி செய்தியாய்
உனக்கு மட்டும் ...!!!
என்னை கவர்ந்த பெண்மொழிகள் - 1
"நாங்க எல்லாரும் படத்துக்கு போகையிலே உன்னை விட்டுட்டு போக மனசில்லே ..இந்த தடவையாவது நீயும் வருகிறாயா "
"வீட்டுலே கேக்கணும் ..அப்படியே கேட்டாலும் விட மாட்டாங்க ... "
"இவ்வளவு நாளா உண்மை தானே பேசினே ...இந்த ஒரே தடவை சின்னதா ஒரு பொய் சொல்லிட்டு எங்களோட படத்துக்கு வாயேன்" ....
"சொல்லலாம் ! ..ஆனா இப்போ சொல்ற பொய் என்னை காட்டி கொடுத்துருச்சுனா இவ்வளவு நாள் நான் சொன்ன உண்மையெல்லாம் பொய் ஆகிடுமே.அதனாலே நான் பொய் சொல்ல போறதில்லே " -பிரேமா

Monday, February 15, 2010
தூரம் -ஒரு எச்சரிக்கை
பெண்ணே,
ஜாக்கிரதை...
இன்று
உனக்கும் எனக்குமான
இந்த 300 கீ.மீ தூரத்தில்
என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா ?
நெட்வொர்க் பிசி,
லோ பேட்டரி ,
நோ பேலன்ஸ்,
அவரவர்க்கான குடும்ப பொறுப்புகள்...
நேரமின்மை,
வேலைப்பளு....
.................................................................
உயிரான ரசனைகள்,
கவிதைதனமான வாழ்க்கை,
குழந்தைத்தனம்
எல்லாம் விட்டு
உயிரற்ற பொருட்களுக்காய் ஓடுகிற
எந்திர ஓட்டம்...
வாழ்க்கையின் கட்டாயங்கள்,
வரவுக்கும் , செலவுக்கும் நடுவே தடுமாறும்
சமுதாய அந்தஸ்து ! !
நாளை ....
இவை எல்லாம்
30 செ.மீ இடைவெளிக்குள் வந்து விடும் ....
தயாராக இருப்போம்
(இதை எழுதி 5 வருடங்கள் ஆகிறது - 2005)

Subscribe to:
Posts (Atom)