தனிமை கொடுமையென்று
நான் சொல்லி வருவதை கண்டு
இத்தனை பேர் உன்னோடு இருக்கையில்
தனிமை எங்கிருந்து வந்ததென்றும் ...
இது போன்ற பிரிவுகள்
வாழ்வில் சகஜம் ..
இதற்காக எதற்கு வருத்தப்படுகிறாய்? -என்றும்
எல்லாரும் கேட்கிறார்கள் ..
தனிமை என்பது தனித்து இருப்பதல்ல ..
நீயின்றி இருப்பது ..
நீ தந்த நினைவுகளில்
என் நிகழ்வுகள் கனப்பது ....
உன்னை போல ஒருத்தி ...
வந்து போன பின்
வாழ்வின் மிச்சங்களை
மீண்டும் தொடர்ந்து கொண்டிருப்பது ..
தேடி கிடைத்த அன்பை
கடமை , காலம் என
நீளும் பட்டியல் நடுவே
தொலை தூரத்து சொந்தமென்று ..
பார்த்து கொண்டிருப்பது .....
Thursday, February 28, 2008
Thursday, February 14, 2008
ஒன்றுமில்லை ,சரி , அப்புறம் ...!!!
ஒன்றுமில்லை ,சரி , அப்புறம் ...
இப்படி ஒற்றை வார்த்தைகளில்
எத்தனையோ காரணங்கள் .. கொண்டு ...
நான் ஆரம்பிக்கும் ...
ஒரு நீளமான உரையாடலையே
எப்படி உன்னால் மட்டும் முடித்து வைக்க முடிகிறது? ...
ஒன்றுமில்லை என்று சொல்லுவது சுலபம் தான் ..
ஆனால் அந்த ஒன்றுமில்லை-க்கு பின்னால்
எத்தனை ஒளித்து வைக்க வேண்டி இருக்கிறது ...
தெரியுமா உனக்கு ?
என் ஏக்கங்கள்,
சின்னச்சின்னதாய் சில எதிர்பார்ப்புகள் ...
உன் அருகாமை வேண்டி...
தவிக்கும் குழந்தைத்தனம் ....எல்லாமே .............
அப்புறம் என்று
அடுத்த வார்த்தைக்கு அடியெடுத்து ....வைத்து ...
எத்தனை விஷயங்கள் மென்று முழுங்க
வேண்டி இருக்கிறது தெரியுமா?
நாம் பிரிந்தது முதல் ......
இன்று நடந்தவை வரை ....
ஆனாலும் எதுவுமே சொல்லாமலும் .. சொல்ல முடியாமலும் ... போனதற்கு ..தண்டனையாய் ..
சரி என்று ... சொல்லி
தொலைபேசியின் தொடர்பை .. துண்டிக்கிறேன்

நீளமா-வட்டமா ...
காதல் நீளமா .... வட்டமா
கருத்து சொல் !!!!! ...
உன்னை நேசிக்க ஆரம்பித்த பின் .
நீ நேசிப்பவர்கள்..
உன்னை நேசிப்பவர்கள் ... என்று
உனக்காக எல்லாரையும் ...
நேசிக்க தொடங்கி . ...
கடைசியில் என்னில் தான்
வந்து ... முடிந்திருக்கிறேன் ...
அப்படியானால் காதல் ???????????
(வாழ்க்கை ஒரு வட்டம்..உலகம் ஒரு வட்டம் ..இந்த மாதிரி இதுவும் ஒரு discussion தான்)

காதலர் தின சிறப்பு மலர்
மலர்கள் ,மரங்கள் ... மலைகள் ...
காடுகள் .. கடல்கள் ..
மழை , அருவி ....
இவை மாத்திரமே ..
இயற்கை என்று ...
தேவதை நீங்கலாய்
யாரோ வகுத்து விட்டார்கள் ..
கவிதைகள் ... கதைகள் ..நாடகம் ..
இவையே ..இலக்கியம் என்று
யாரோ வகை பிரித்து ...
போய்விட்டார்கள் ..
அந்த யாரோவுக்கு தெரியவில்லை ..
நீ பிறக்க போகிறாய் என்று ...
அந்த யாரோவுக்கும்
அந்த யாரோ சொல்லி போனதை
பின்பற்றும் எல்லாருக்கும் தான்
உன் இருத்தலை
இப்படி ...எடுத்து சொல்லி கொண்டிருக்கிறது ..
என் காதல் !..

Wednesday, February 13, 2008
என் பெற்றோர்
பெண்ணே ,
நாம் சந்தித்து பிரிவோம் என்று யாருக்கோ தெரிந்திருக்கிறது ..
அதனால் தான்
வழி தொலைந்த பிள்ளையை போல்
அழுது கொண்டிருக்கும் எனக்கு ..
உன்னை மறக்க வைக்கும் மருந்தை ...
நான் பிறக்கும் முன்னமே ...
கண்டுபிடித்து ... வைத்திருக்கிறார்கள் ...
என் அழுகை அர்த்தமற்றது என்றாலும்
இரவும் பகலும் போல்
உறவும் ,பிரிவும் என்று
என்னை உணரச்சொல்லி
ஆறுதல்படுத்தும் மருந்தாய்
-என் பெற்றோர் ....!!!!!!!!!!!!

Wednesday, December 19, 2007
Fuzzy logic-ம் நானும்
Dec 2003 -மாலை நேரம்
வகுப்பு முடிந்து எல்லோரும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து போய் கொண்டு இருந்தோம் .அப்போது நான் மட்டும் முகத்தை சோகமாக வைத்துகொண்டிருந்தேன்.உடன் வந்த எல்லாரிலும் ,Sam மட்டும் என் அருகில் வந்து "ஏன் சோகமா ..இருக்கே ?"
"இல்லேப்பா, எல்லோரும் என்னை கறுப்பா இருக்கேனு சொல்றாங்க அதான்"
"அய்யய்யோ !!!!!!!!!! இதுக்கா feel பண்றே" ...?..
"இப்போ சொல்றேன் ... நீ செகப்பு தான்" ..இவனும் கேலி பண்ணுகிறானா என்பது போல் அவனை பார்த்தவாறே
"பாத்தியா ... நீயும் .." என்று மறுபடியும் நான் வருத்தப்பட ஆரம்பிக்க..
"இல்லேமா .. Fuzzy logic-nu ஒன்னு இருக்கு அதுபடி பாத்தா நீ செகப்பு தான் "...
"புரியலே" ..
"சொல்றேன் .. ..Fuzzy logic -na என்னன்னா, இப்போ ஒரு 60 வயசுக்காரரை ...
என்ன சொல்வோம் "..
"கிழவன்னு ...சொல்வோம் ..."
"ஓகே அப்டினா ... 80 வயசுக்காரரை என்னன்னு சொல்வே ?" ...
"அவரையும் ... கிழவன்னு தான் சொல்வோம்" ................
"இப்போ 60 வயசுக்காரரோட .. 80 வயசுக்காரரை .. compare பண்ணினா 60 வயசுக்காரரை இளமையானவருனு தானே சொல்வோம்" ...
"இதுக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம்?"........
"ஓகே wait.... இப்போ நீ கருப்புதான் ...............ஆனா ஒரு ஆப்ரிக்காகாரனோட உன்னை Compare பண்ணினா .... நீ செகப்பு தானே" ..
'எப்படியோ நாம செகப்புனு முடிச்சானே' என்பது போல் நிம்மதியாக நான் அவனை பார்த்தேன். அதன் பின் அந்த இரண்டு வருட கல்லூரி வாழ்வில் மட்டும் அல்ல , எப்போது ... யார் என்னை கருப்பு என்று சொன்னாலும் அவர்களுக்கு fuzzy logic- பற்றி விளக்க உரை கொடுக்கப்பட்டு விடும் ......
இப்படியாக கல்லூரி வாழ்க்கை முடிந்து......வேலைக்கு சேர்ந்து ஆகிவிட்டது
Sep 2007 - சில நாட்களுக்கு முன் ...
இப்போ பெங்களூர்-ல் ..நம்ம ரூம்மேட் அதுவும் ஜூனியர் பொண்ணு ,ஆபீஸ் முடிந்து வந்த பின் ஆரம்பித்தாள்
"அக்கா ... நான் என்ன கருப்பாவா இருக்கேன் .... என்னோட team-லே எல்லாரும் சொல்றாங்க ... "
ஆஹா ! இந்த பொண்ணே கருப்புன்னு நெனச்சா, நாம எந்த மூலை ?..இப்படி நினைத்து கொண்டே..
"யாரு சொன்னா உன்னை கருப்புன்னு ... நீ செகப்புதாம்மா"
அவள் , நான் தூக்க கலக்கத்தில் உளறுகிறேனோ என்பது போல் பார்க்க,
உடனே "fuzzy logic-படி நீ செகப்பு தான் ..."
"அப்படினா ..........."
'இதுதான் சரியான ...நேரம்' என்பது போல் நான் ஆரம்பித்தேன் ....
"இப்போ ஒரு 60 வயசுக்காரரை ... என்ன சொல்வோம்? " "கிழவன்னு ...சொல்வோம் ..."
"ஓகே அப்டினா ... 80 வயசுக்காரரை என்னனு சொல்வே ?... "
"அவரையும் ... கிழவன்னு தான் சொல்வோம் ............"
"இப்போ 60 வயசுக்காரரோட , 80 வயசுக்காரரை Compare பண்ணினா 60 வயசுக்காரரை ...என்னனு சொல்வே? "
"சின்ன கிழவன்னு சொல்வேன் ???????????????????????????????????"
(ரூம் போட்டு யோசிப்பாங்களோ )

Tuesday, December 18, 2007
பைத்தியக்காரர்கள் பிறப்பதில்லை !!!!!!!!!!!!!!!!!
உன்னை பார்க்கும் ..வரை
எண்ணங்களை கொட்டி
ஏட்டில் வடிப்பதெல்லாம்
கவிதையென்று..
எண்ணிக்கொண்டும் ..
எழுதி கொண்டுமிருந்தேன் ..
உன்னை பார்த்து விட்ட பின்னரோ ..
பேனாவில் இருந்து
தவறுதலாய் மை கொட்டிவிட்டாலே ..
கவிதை என்று சொல்லி திரிகிறேன் !!!!!!!!!!!!!!

Subscribe to:
Posts (Atom)