(இது சத்தியமாக கவிதையல்ல )
வாரத்தின் ஐந்து வேலை நாட்கள்
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில்
பட்டியலிட்டபடி வீட்டு வேலைகள்
அழுக்கு துணிகள் துவைத்து
அரையும் குறையுமாய்
என் வீடெல்லாம் சுத்தம் செய்து..
சனி ஞாயிறு
சொந்த ஊரில்
விடுமுறை கழிக்க ..
முதல் நாள் அம்மா வீட்டில்
இரவில் பயணித்த களைப்பு
சிறிது நேரம் ஓய்வெடுத்து ..
கோவிலுக்கு போய்
கொஞ்சம் பேசி ,சிரித்து ,கவலைப்பட்டு
வீடெல்லாம் துடைத்து
துணி துவைத்து ...
மறு நாள் மாமியார் வீடு
ஒட்டடை அடித்து ,
மின் விசிறிகள் துடைத்து
சமையலறை சுத்தம் செய்து ,
உடலும் உள்ளமும் அலுத்து தூங்கையில்
என் நிலையை நினைத்து
சின்னதாய் ஒரு சிரிப்பு வந்தது
உழுகிற மாடுகள் பரதேசம் போனாலும்
பெரும்பாலான நேரங்கள்
உழவை (து)மறக்கவொரு வாய்ப்பு இருப்பதில்லை
(இதை நான் ,என் அம்மா, மாமியார் சார்பாக எழுதி இருக்கிறேன் ...
அவர்கள் பழகி விட்டார்கள் ... நான் ஆரம்பத்தில் இருக்கிறேன்
வேலை செய்வது என் கவலை அல்ல
சிறிது ஓய்வுக்கு ஏங்கும் உள்ளம் )
No comments:
Post a Comment