இங்கே மணமான தம்பதியர் எதிர் கொள்ளும் கேள்வி ? குழந்தை எப்போ ?
இதே கேள்விகளை நானும் மற்றவரிடம் கேட்டும் இருக்கிறேன். இந்த கேள்விக்கு நடுவே சிக்கியும் தவித்து இருக்கிறேன் .
சின்ன வயதில் நான் குறும்புகள் செய்து அம்மாவிடம் மாட்டும் போது அதிகபடியான ஆத்திரத்தில் அம்மா திட்டும் போது, இப்படி திட்டுவாள் "எங்கிருந்து தான் எனக்குனு நீ வந்து பிறந்தியோ ?"
"அட பாவி ரெண்டு பிள்ளை பெத்தியே.. அந்த ஆஸ்பதிரியிலவாது கேட்டு தெரிந்திருக்க கூடாது .. சரி சரி கவலை படாதே . எங்கிருந்து பிறந்ததுன்னு நான் பிள்ளை பெறும் போது தெரிந்து உனக்கு சொல்றேன்."...எளிதாய் வாயடைத்து விடுவேன் .
ஆனால் நிலைமை இப்போது மாறுகிறது ..தனியே ஒரு நாட்டுக்கு பயணிக்கும் போது இல்லாத பயம் , நள்ளிரவில் தனியாய் நடந்து போகையில் வராத பயம் ...............
சமையலறை வாசனை காரணமாக எனக்கான உணவை சமைக்க முடியாமல் பசியில் தண்ணீரை குடிக்கும் போதெல்லாம்... தாய்மையின் ஆரம்ப கால அறிகுறிகள் கலங்கடிகின்றன.
கோயில் இல்லாத ஊரில் மட்டுமல்ல , பெற்றவள் நமது அருகே இல்லாத ஊரிலும் பெண்களே நீங்கள் குடியிருக்க வேண்டாம் ...என்று சொல்ல தோன்றுகிறது.
முதன்முதலாய் பள்ளிகூடத்தில் சேரும் போதும் நான் பெற்றவளை பிரிந்ததற்காய் அழுததில்லை . படித்து முடித்து வேலைக்காக பெற்றவளை பிரிந்து வேறு ஒரு ஊரில் வசிக்க நேர்ந்த போதும் அதிகம் அழுததில்லை . என் திருமண நாள் அன்று என் பெற்றோரை பிரிந்ததற்காய் நான் அழுததை விட இதோ என் வயிற்றில் சின்னதாய் ஒரு உயிர் முளை விட்டதற்கான அடையாளத்தை மருத்துவர் வாழ்த்துகளோடு சொல்லும் போது
பெரிதாய் அழுகிறேன் " என்னால் முடியவில்லை ,என் பிள்ளைக்காகவாவது என்னை என் அம்மாவிடம் சேர்ப்பித்து விடுங்கள்".
ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் அம்மா அழுததுண்டு.அம்மாவை புரிந்து கொள்ளாத விளையாட்டு பிள்ளையாய் இருந்தேனோ என்று தோன்றுகிறது.
ஆண்பிள்ளைகள் தங்கள் வாழ்நாளில் அம்மாவை புரிந்து கொள்ள முடியாமல் கூட போகலாம் .ஆனால் பெண்பிள்ளைகள் அம்மாவை உடலியல் பூர்வமாய் ,உணர்வுபூர்வமாய் புரிந்து கொள்ள பிள்ளை பெறுவதை போல ஒரு நல்ல சந்தர்ப்பம் இல்லை.
3 comments:
:-) வாழ்த்துக்கள்.. இதவிட இன்னம் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் குட்டி வெளியில வந்த உடனே...
arumaiya iruku subi.chace illa.unarvu poorvama iruku.
romba arumai subi.chance illa
Post a Comment