இப்போதெல்லாம் வேலைக்கு போயி சம்பாரிக்கிற படித்த அறிவாளிகள் சிலர் பெருமையாக சொல்லி கொள்கிற வார்த்தை .." எனக்கு எதுவும் தெரியாது . என் செலவுக்கான பணத்தை எடுத்து கொண்டு ,மீதி சம்பளத்தை என் அப்பாவிடம் ,அல்லது என் கணவரிடம் கொடுத்து விடுவேன் . எங்கே முதலீடு செய்ய வேண்டுமோ அவர்கள் பார்த்து கொள்வார்கள் . நம் நல்லது தானே அவர்களுக்கு முக்கியம் ,அதனால் அவர்கள் இஷ்டத்துக்கு விட்டுவிட்டேன்" .
ரொம்ப சரி ,நம் நல்லதை தான் எல்லாரும் விரும்புகிறார்கள் .ஆனால் இதன் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்
இவர்களுக்கு இருப்பது பொறுப்பை தட்டி கழித்தல் மற்றும் தப்பிக்கும் மனப்பான்மை .
எங்கே எப்படி முதலீடு செய்வதென்று தெரியவில்லையா .சரி தேடி ,படித்து கற்று கொள்ளுங்கள் என்றால் ,எனக்கு நேரமே இல்லை ... இது அடுத்த புகார் .
நாம் சம்பாதிக்கும் பணத்தை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று இந்த பதிவில் நான் சொல்ல வில்லை. ஆனால் உங்கள் பணத்தின் சிறு பகுதியை ,உங்கள் முயற்சியை கொண்டு நல்ல வழியில் முதலீடு செய்ய நீங்கள் துணிய வேண்டும்.
1 comment:
குறைந்த பட்சம் சேமிப்பு கணக்கிலாவது போட்டு வைக்கலாம்
Post a Comment