(இது சத்தியமாக கவிதையல்ல )
வாரத்தின் ஐந்து வேலை நாட்கள்
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில்
பட்டியலிட்டபடி வீட்டு வேலைகள்
அழுக்கு துணிகள் துவைத்து
அரையும் குறையுமாய்
என் வீடெல்லாம் சுத்தம் செய்து..
சனி ஞாயிறு
சொந்த ஊரில்
விடுமுறை கழிக்க ..
முதல் நாள் அம்மா வீட்டில்
இரவில் பயணித்த களைப்பு
சிறிது நேரம் ஓய்வெடுத்து ..
கோவிலுக்கு போய்
கொஞ்சம் பேசி ,சிரித்து ,கவலைப்பட்டு
வீடெல்லாம் துடைத்து
துணி துவைத்து ...
மறு நாள் மாமியார் வீடு
ஒட்டடை அடித்து ,
மின் விசிறிகள் துடைத்து
சமையலறை சுத்தம் செய்து ,
உடலும் உள்ளமும் அலுத்து தூங்கையில்
என் நிலையை நினைத்து
சின்னதாய் ஒரு சிரிப்பு வந்தது
உழுகிற மாடுகள் பரதேசம் போனாலும்
பெரும்பாலான நேரங்கள்
உழவை (து)மறக்கவொரு வாய்ப்பு இருப்பதில்லை
(இதை நான் ,என் அம்மா, மாமியார் சார்பாக எழுதி இருக்கிறேன் ...
அவர்கள் பழகி விட்டார்கள் ... நான் ஆரம்பத்தில் இருக்கிறேன்
வேலை செய்வது என் கவலை அல்ல
சிறிது ஓய்வுக்கு ஏங்கும் உள்ளம் )
Tuesday, January 12, 2010
Thursday, January 7, 2010
படித்ததில் பிடித்தது - ஜென் கதை
பல போர்களை வென்ற ஒரு ராணுவத் தளபதி, தன் வீட்டில் பழமையான ஒரு கண்ணாடிப் பொருளைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அந்தப் பொருள் அவர் கையில் இருந்து நழுவிவிட்டது. ஒருகணம் தவித்துப்போன அவர் அது தரையைத் தொடும் முன் எப்படியோ பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
"எத்தனையோ ஆயுதங்களுக்கு எதிராக நின்றபோதுகூட பதைக்காதவன் இச்சிறு பொருளுக்காக ஏன் பதைத்தேன்?" என்று ஒருகணம் யோசித்தார் தளபதி.
அவர் முகத்தில் திடீர் என்று ஒரு புன்னகை முளைத்தது. அந்தக் கண்ணாடிப் பொருளை வீசி எறிந்து உடைத்தார்.
விளக்கம்:
"வாழ்க்கையின் பெரும்பான்மையான தருணங்களில் நீங்கள் ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதினால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில்கூட சில கட்டாயங்களை நீங்களே விதித்துக்கொண்டுவிடுவீர்கள். சொல்லப்போனால், உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்தி, அதன் மீது உங்கள் வாழ்க்கையை அமைக்கக்கூட அவசியம் இல்லை.
எல்லா அடையாளங்களையும் தாண்டி இருக்கையில்தான், உங்கள் திறன் உச்சத்தில் செயல்படுகிறது. குறுகலான வரையறைகளைத் தாண்டி காலெடுத்துவைக்கையில், நினைத்துப்பார்க்காத விஷயங்கள்கூட சாத்தியமாகின்றன.
எல்லை இல்லாத உயிரைப்போய் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். அட, மனதில் தோன்றும் எண்ணங்களுடன்கூட உங்களுக்கு அடையாளம் வந்துவிட்டது. நீங்கள் உருவாக்கிய உணர்வுடன்கூட அடையாளம் பிறந்துவிட்டது.
எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள் என்று எல்லாவற்றுடனும் ஓர் அடையாளம் உங்களைப் பிணைத்துப்போடுகிறது. அந்த அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் தேவையற்ற பதைப்பு வரத்தான் செய்யும்.
இதேரீதியில் ஒரு சிறு கண்ணாடிக் கோப்பையுடன்கூட தன்னைத் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்திக்கொண்டுவிட்டதால் ஏற்பட்ட பதைப்பை உணர்ந்த தளபதி, அதில் இருந்து விடுபடும்விதமாக அதை வீசி எறிந்து நொறுக்குகிறார்.
நீங்கள் வீசி எறிய வேண்டியது, கண்ணாடிப் பொருட்களை அல்ல; உங்கள் அடையாளங்களை!"

Monday, January 4, 2010
பரிமாற்றம்
உன் உதடுகள்
எத்தனை விளக்கங்கள் சொன்னாலும்
என் மனசுக்கு கேட்பதுவும்
ஓயாமல் ஒலிப்பதும்
உன் மௌனங்களே !!
சில நேரம்
தந்தி கம்பத்து குருவியும்
தந்தி கம்பத்துள் போகும் செய்தியுமாய்
நாம் பேசி கொள்கிறோம்
எத்தனை விளக்கங்கள் சொன்னாலும்
என் மனசுக்கு கேட்பதுவும்
ஓயாமல் ஒலிப்பதும்
உன் மௌனங்களே !!
சில நேரம்
தந்தி கம்பத்து குருவியும்
தந்தி கம்பத்துள் போகும் செய்தியுமாய்
நாம் பேசி கொள்கிறோம்
Friday, December 11, 2009
எப்போது நேரம் ?
உன் வீட்டில் நீ மகனாய்
நான் மருமகளாய்....
நாமிருக்கும் வீட்டிலும்
நான் பிறந்த - என் வீட்டிலும்
உன் மனைவியாய்....
எப்போது உனக்கு நேரம் கிடைக்கும் ?
என் பெற்றவருக்கு மகளாய்
என்னை பார்க்க....
நான் மருமகளாய்....
நாமிருக்கும் வீட்டிலும்
நான் பிறந்த - என் வீட்டிலும்
உன் மனைவியாய்....
எப்போது உனக்கு நேரம் கிடைக்கும் ?
என் பெற்றவருக்கு மகளாய்
என்னை பார்க்க....
Thursday, November 19, 2009
படித்ததில் பிடித்தது
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.
அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

ஏன் ?
எல்லாம் தான் தெரிகிறது ...
எதார்த்தம் எதுவென்றும் புரிகிறது ...
பசித்தால் எனக்கு மட்டுமே பசிக்கிறது ...
ஆனால் சாப்பிடும் போது
உன்னையும் - மனம் ஏன் நினைக்கிறது ?
எதார்த்தம் எதுவென்றும் புரிகிறது ...
பசித்தால் எனக்கு மட்டுமே பசிக்கிறது ...
ஆனால் சாப்பிடும் போது
உன்னையும் - மனம் ஏன் நினைக்கிறது ?
Friday, October 30, 2009
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் கொங்கு அழிந்தால் எங்கும் அழியும்
"கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
கொங்கு அழிந்தால் எங்கும் அழியும்"
இப்படி தாங்க நானும் இந்த பழமொழியை பெருமையா சொல்லிட்டு திரிஞ்சேன்
பின்ன நாம தான் ஈரோட்டு சிங்கமுல்ல.. கொங்கு தமிழில் பேசி கர்நாடகாவை கலக்கறமுல்ல...
இந்த சிங்கம் அசிங்கமானது ஒரு ஜேடர்பாளையத்து தங்கத்துனால தாங்க....(முன்குறிப்பு) : இதெல்லாம் எங்க ஊட்டுக்காரர் சொன்னதுங்கோ........
இங்கே கொங்கு என்பது தேனை குறிக்கிறது. தேன் செழிக்க தேனீக்களுக்கு என்ன வேண்டும்? மலர்கள் ,சோலைகள் . சோலைகள் ,காடுகள் செழித்தால் மழை ,மற்றும் நீருக்கு குறைவிருக்காது .இவை எல்லாம் இருந்தால் விவசாயம் செழிக்கும் . விவசாயம் செழித்தால் மற்ற தொழில்கள் செழிக்கும். மக்கள் வாழ்க்கை செழிக்கும்
அவரு ஒரு கதை கூட சொன்னாருங்கோ...
அவ்வையார் ஒரு மன்னனை வாழ்த்த விழையும் போது.இப்படி சொன்னாராம்
"வரப்பு உயரும் .."
"வரப்பு உயரும் .."
கேட்டவங்க எல்லார்க்கும் ஒரே சந்தேகம் ...என்னடா இது வாழ்த்த சொன்னா..நல்லா இருப்பே ... இல்லே நாசமா போயிருவேனு வாழ்த்தாம ...இப்படி வரப்பு உயரும் .. வாய்க்கால் உயரும்ன்னு இந்த அம்மா சம்பந்தமே இல்லாம சொல்றாங்களேன்னு......
வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்
மழை பெய்ஞ்சு தண்ணீர் போனா வயல்ல நிறைய பாயட்டும்ன்னு வரப்பை உயர்த்தி கட்டுவாங்க..நீர் நிறைய கிடைக்க பெற்றால் பயிர்கள் செழிக்கும்..விவசாயம் செழித்தால் மக்கள் செழிப்பர்..மக்கள் செழிக்க மன்னன் செழிப்பான்.
Subscribe to:
Posts (Atom)