நான் அழுவதும்,ஆத்திரப்படுவதும்
உன் கண்ணுக்கு தெரிகிறது
என் காயங்கள் ?????????
நீ கொடுத்தவை என்பதால்
ஒவ்வொன்றையும்
பிரத்யேகமாக உனக்கு
நான் அறிமுகம் செய்ய தான் வேண்டி இருக்கிறது
செய்யாத ஒவ்வொன்றுக்கும்
சரியான முறையில் விளக்கம்
கொடுத்து கொண்டிருக்கிறாய்
செய்வதை தள்ளி போட்டுகொண்டே !!!!!!!!
என் கேள்விகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய அவசியமே
எப்போதும் இல்லை உனக்கு
ஆனால் என் கண்ணீருக்கு ???
ஆயுதமின்றி அகப்பட்டுக் கொண்ட
ஆயுள் கைதி நான்
ஒரே நொடியில்
என்னை கொன்று விட சரியான ஆயுதம் எதுவென்று
உனக்கு யாரும் சொல்ல வில்லையா
ஏன்
தவணை முறையில்
கூறு போட்டு கொண்டிருக்கிறாய்?
உன் பரிசுகளில்
உண்மையை விட
பெரிய அன்பும் இல்லை...
பொய்யை விட
பெரிய வன்முறையும் இல்லை
முட்டாள்களை அதிகம்
உருவாக்குவது
மூட நம்பிக்கையா
காதல் நம்பிக்கையா
இரண்டும் கலந்ததொரு கல்யாண வாழ்க்கையா
சமாதானங்கள்,மன்னிப்புகள்
என்னை நீ எளிதில் ஏமாற்றி விட முடியும்
அதற்காகவே காத்துமிருக்கிறேன் !!!
நீ உன் சுதந்திரத்தை இழந்து விட்டதாய்
நான் புலம்பி கொண்டிருக்கிறேன்
எவ்வளவு என்று யோசிக்காதே
என்னிடம் உண்மை பேசுகிற அளவு !!!!!!!!
1 comment:
ரொம்ப நல்லா இருக்கு சுபத்ரா.. இன்னைக்கென்னவோ உங்கள் எல்லா பழைய பதிவுகள் கூட எடுத்து படிச்சிட்டு இருக்கேன்...
Post a Comment